1) விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
a) முதுமொழி மாலை
b) செந்தமிழ் இலக்கணம்
c) கொடுந்தமிழ் இலக்கணம்
d) தொன்னூல் விளக்கம்
2) உரிய விடையை எழுதுக :
“இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என தம் கல்லறையில் எழுத வேண்டுமென விரும்பிய மேனாட்டு அறிஞர்
a) ஜி.யு.போப்
b) வீரமாமுனிவர்
c) சீகன்பால்கு
d) டாக்டர் கால்டுவெல்
3) வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர் யார்?
a) ரா.பி. சேதுப்பிள்ளை
b) குணங்குடி மஸ்தான் சாகிபு
c) ஆறுமுகநாவலர்
d) பரிதிமாற்கலைஞர்
4) தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினனக் கொணர்ந்தவர் யார்?
a) வேதநாயகம் பிள்ளை
b) வீரமாமுனிவர்
c) H.A. கிருஷ்ணப்பிள்ளை
d) உ.வே. சாமிநாதையர்
5) பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
a) சத்திய வேத கீர்த்தனை
b) திருக்காவலூர்க் கலம்பகம்
c) அழுங்கல் அந்தாதி
d) அடைக்கல மாலை
6) “தமிழ் செய்யுள் கலம்பகம்”
இது யார் தொகுப்பு?
a) மறைமலை அடிகளார்
b) திரு.வி.க
c) க.சு.பிள்ளை
d) ஜி.யு.போப்
7) பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
a) தேம்பாவணி
b) கித்தேரி அம்மாள் அம்மானை
c) செந்தமிழ் இலக்கணம்
d) ஆசாரக்கோவை
8) வீரமாமுனிவர் தமது எத்தனை வயதில் தமிழகம் வந்து தமிழ் படித்து காப்பியம் படைத்தார்
a) நாற்பது
b) முப்பது
c) இருபது
d) அறுபது
9) அகராதி முறையைத் தமிழுக்குத் தந்தவர்
a) எல்லீசுத்துரை
b) போப் ஐயர்
c) ரேனியல் ஐயர்
d) வீரமாமுனிவர்
10) ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
a) பிரஞ்சு
b) கிரேக்கம்
c) ஆங்கிலம்
d) ஜெர்மன்