1) கோடிட்ட இடத்தை நிரப்புக
யவனர் என்று அழைக்கப்பட்டவர் ————
a) உரோமானியர், எகிப்தியர்
b) கிரேக்கர், உரோமானியர்
c) கிரேக்கர், சீனர்
d) சீனர், எகிப்தியர்
2) “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”
இக்கூற்றுக்குரியவர் யார்?
a) கம்பர்
b) கணியன் பூங்குன்றனார்
c) ஒளவையார்
d) இளங்கோவடிகள்
3) பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?
a) பஃறி
b) திமில்
c) ஓடை
d) வங்கம்
4) பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெணிசு நாட்டுப் பயணி
a) தாலமி
b) பிளினி
c) யுவான் சுவாங்
d) மார்க்கோ போலோ
5) 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?
a) கீழார்வெளி
b) ஆதிச்சநல்லூர்
c) மதுரை
d) திருவண்ணாமலை
6) வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது ———— யைக் குறிக்கும்
a) சிங்கம்
b) கடல்
c) மாலை
d) சந்தனம்
7) தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க
a) ஏலமும், இலவங்கமும்
b) இஞ்சியும், மிளகும்
c) பட்டும், சருக்கரையும்
d) முத்தும், பவளமும்
8) அகழாய்வில் “முதுமக்கள் தாழிகள்” கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
a) தச்சநல்லூர்
b) ஆதிச்சநல்லூர்
c) பெரவல்லூர்
d) பெரணமல்லூர்
9) யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?
a) பாரி
b) பேகன்
c) அதியமான்
d) ஓரி
10) மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க
a) கலம், தோணி, புணரி, மிதவை
b) கலம், பரிசில், ஓடம், பரவை
c) கலம், வங்கம், புணை, அம்பி
d) கலம், பரிசில், ஆழி, பஃறி