உணவே மருந்து – நோய்‌ தீர்க்கும் மூலிகைகள்‌ தொடர்பான செய்திகள் (PYQ)

1) பெண்களின்‌ கருப்பை சார்ந்த நோய்களை இம்மூலிகை நீக்குவதால்‌ இதற்குக்‌ குமரி என்ற பெயருண்டு. அம்மூலிகை எது?

a) குப்பைமேனி
b) துளசி
c) கீழாநெல்லி
d) கற்றாழை

2) பொருத்துக
A) துளசி – 1) மலப்புழுக்கள்‌ வெளியேறும்‌
B) கீழாநெல்லி – 2) இளைப்பு இருமல்‌ போக்கும்‌
C) தூதுவளை – 3) மஞ்சட்காமாலை நோய்‌ நீங்கும்‌
D) குப்பைமேனி – 4) தலைவலி நீங்கும்

a) A-4, B-3, C-2, D-1
b) A-3, B-4, C-2, D-1
c) A-2, B-1, C-3, D-4
d) A-1, B-2, C-3, D-4

3) உரிய விடையைத் தேர்க :
நோய்க்கு முதற்காரணம்‌ எது?

a) உப்பு
b) சர்க்கரை
c) கொழுப்பு
d) கார்ப்பு

4) பொருத்துக : [நோய்‌ – தீர்க்கும்‌ மூலிகைகள்‌]
A) மார்புச்சளி – 1) கீழாநெல்லி
B) மஞ்சட்காமாலை – 2) அகத்திக்கீரை
C) இளைப்பிருமல்‌ – 3) துளசி
D) பல்சார்ந்த நோய்‌ – 4) தூதுவளை

a) A-4, B-2, C-3, D-1
b) A-1, B-3, C-2, D-4
c) A-3, B-1, C-4, D-2
d) A-2, B-4, C-1, D-3

5) ஞானப்பச்சிலை எனப்‌ போற்றப்படும்‌ மூலிகை ————

a) துளசி
b) கீழாநெல்லி
c) தூதுவளை
d) கற்றாழை

6) கோடிட்ட இடங்களை நிரப்புக
சிங்கவல்லி என்று வழங்கப்படும்‌ மூலிகை ————

a) தூதுவளை
b) துளசி
c) அகத்திக்கீரை
d) கீழாநெல்லி

7) இதன்‌ பட்டையை அரைத்துத்‌ தடவினால்‌ முறிந்த எலும்பு விரைவில்‌ கூடும்‌

a) முருங்கைப்பட்டை
b) வேப்பம்பட்டை
c) புளியம்பட்டை
d) நாவற்‌ பட்டை

8) கீழ்க்கண்டவற்றுள்‌ கரிசிலாங்கண்ணியின்‌ சிறப்புப்‌ பெயர் யாது?

a) கீழ்வாய்‌ நெல்லி
b) குமரி
c) பிருங்கராசம்‌
d) ஞானப்‌ பச்சிலை

9) ‘பிருங்கராசம்‌’, ‘தேகராசம்‌’ – எந்த மூலிகையின்‌ வேறு பெயர்கள்‌

a) குப்பைமேனி
b) கரிசலாங்கண்ணி
c) கறிவேப்பிலை
d) கற்றாழை

10) குரல்வளத்தை மேம்படுத்தும்‌ மூலிகை

a) தாதுவளை
b) ஞானப்பச்சிலை
c) குப்பைமேனி
d) கற்றாழை