எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில்‌ உள்ள பிற செய்திகள்‌ (PYQ)

1) “மன்னன்‌ உயிர்த்தே மலர்தலை உலகம்‌” எனப்‌ பாடியவர்‌

a) அரிசில்கிழார்‌
b) மோசிகீரனார்‌
c) ஒளவையார்‌
d) பரணர்‌

2) ‘நல்ல’ எனும்‌ அடைமொழியைப்‌ பெற்ற நூல்‌ எது?

a) நற்றிணை
b) குறுந்தொகை
c) அகநானூறு
d) ஐங்குறுநூறு

3) முந்தை இருந்து நட்டோர்‌ கொடுப்பின்‌
நஞ்சும்‌ உண்பர்‌ நனி நாகரிகர்‌ – இவ்வாறு தமிழரின்‌ நாகரிகப்‌ பண்பை சுட்டும்‌ இலக்கியம்‌

a) நற்றிணை
b) குறுந்தொகை
c) ஐங்குறுநூறு
d) அகநானூறு

4) பொருந்தாததைக்‌ கண்டெழுதுக [நூல்‌ – அடிகள்‌]

a) பெரும்பாணாற்றுப்படை – 500
b) முல்லைப்பாட்டு – 103
c) மதுரைக்காஞ்சி – 872
d) பட்டினப்பாலை – 301

5) ‘நரம்பின்‌ மறை’ என்ற இசையைப் பற்றிக்‌ குறிப்பிடும்‌ நூல்‌

a) நன்னூல்‌
b) தேவாரம்‌
c) தொல்காப்பியம்‌
d) திருவாசகம்‌

6) நெடுந்தொகை என்று அழைக்கப்படும்‌ நூல்‌

a) பரிபாடல்‌
b) கலித்தொகை
c) புறநானூறு
d) அகநானூறு

7) மலையமான்‌ என்ற மன்னன்‌ மக்களை யானையின்‌ கால்‌ கீழிட்டுக்‌ கொல்ல முற்பட்டபொழுது, தடுத்து நிறுத்திய புலவர்‌

a) கபிலர்‌
b) கோவூர்க்கிழார்‌
c) மோசிகீரனார்‌
d) ஒளவையார்‌

8) பத்துப்பாட்டில்‌ பன்னிரு திருமுறைகளிலும்‌ இடம்‌ பெறுவது

a) தேவாரம்‌
b) திருவிளையாடற்புராணம்‌
c) திருமுருகாற்றுப்படை
d) குறிஞ்சிப்பாட்டு

9) ‘திருமுருகாற்றுப்படை’ சைவத்‌ திருமுறைகளில்‌ எத்தனையாவது திருமுறை?

a) எட்டாம் திருமுறை
b) பத்தாம்‌ திருமுறை
c) ஐந்தாம்‌ திருமுறை
d) பதினோராம்‌ திருமுறை

10) பதிற்றுப்பத்து நூலில்‌ கிடைக்கப்‌ பெறாதவை

a) முதற்‌ பத்தும்‌ மூன்றாம்‌ பத்தும்‌
b) ஐந்தாம்‌ பத்தும்‌ பத்தாம்‌ பத்தும்‌
c) இரண்டாம்‌ பத்தும்‌ எட்டாம்‌ பத்தும்‌
d) முதற் பத்தும்‌ பத்தாம்‌ பத்தும்‌