பெரியபுராணம்‌ – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற்புராணம்‌ – தேம்பாவணி – சீறாப்புராணம்‌ தொடர்பான செய்திகள்‌ (PYQ)

1) திருமங்கையாழ்வார்‌ சொல்லணியில்‌ அமைத்துப்‌ பாடிய நூல்‌ எது?

a) திருக்குறுந்தாண்டகம்‌
b) திருவெழுக்கூற்றிருக்கை
c) திருநெடுந்தாண்டகம்‌
d) திருவந்தாதி

2) சீறாப்புராணத்தில்‌ தீர்க்கதரிசனத்தைக்‌ கூறுவது

a) நுபுவத்துக்‌ காண்டம்‌
b) விலாதத்துக்‌ காண்டம்‌
c) ஹஜிறத்துக்‌ காண்டம்‌
d) மேற்கூறிய அனைத்தும்‌

3) சிவபெருமான்‌ திருக்கோவிலின்‌ எதிரே உள்ள அறுகால்‌ பீடத்தில்‌ இருந்து வடமொழி, தென்மொழிப்‌ புலவர்‌ போற்ற அரங்கேற்றிய நூல்‌ எது?

a) பெரிய புராணம்‌
b) திருவிளையாடற்புராணம்‌
c) கந்தபுராணம்‌
d) திருவாசகம்‌

4) பெரியபுராணத்தில்‌ யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

a) திருநாவுக்கரசர்‌
b) திருஞானசம்பந்தர்‌
c) சுந்தரர்‌
d) காரைக்கால்‌ அம்மையார்‌

5) ‘தேம்பாவணி’ நூலில்‌ உள்ள படலங்களின்‌ எண்ணிக்கை

a) 39 படலங்கள்‌
b) 30 படலங்கள்‌
c) 32 படலங்கள்‌
d) 36 படலங்கள்‌

6) தம்மை நாயகியாகக்‌ கற்பனை செய்து நாரையைத்‌ தூதுவிட்ட ஆழ்வார்‌ யார்‌?

a) பொய்கையாழ்வார்‌
b) நம்மாழ்வார்‌
c) குலசேகர ஆழ்வார்‌
d) பெரியாழ்வார்‌

7) பெரிய புராணத்துள்‌ குறிப்பிடப்படும்‌ தொகை அடியார்களின்‌ எண்ணிக்கை யாது?

a) 8 அடியார்கள்‌
b) 9 அடியார்கள்‌
c) 10 அடியார்கள்‌
d) 11 அடியார்கள்‌

8) பெரியபுராணம்‌ காட்டும்‌ முப்‌பொருட்கள்‌ என திரு.வி.க. பட்டியலிடுபவை

a) அன்பு, அறிவு, ஆனந்தம்‌
b) பக்தி, பணிவு, பாசம்‌
c) உலகம்‌, உயிர்‌, கடவுள்‌
d) தெய்வம்‌, பக்தி, பூசை

9) கீழ்க்காண்பவர்களுள்‌ அமைச்சராக இருந்து அருந்தமிழ்‌ வளர்த்தவர்‌

a) பொய்யாமொழித்தேவர்‌
b) திருத்தக்க தேவர்‌
c) அருண்மொழித்தேவர்‌
d) பாண்டித்துரை தேவர்‌

10) உரிய விடையை எழுதுக:
“உலகெல்லாம்‌ உணர்ந்து ஓதற்கரியவன்‌” எனத்‌ தொடங்கும்‌ பாடல்‌ இடம்‌ பெற்றுள்ள நூல்‌ எது?

a) கந்தராணம்‌
b) திருமந்திரம்
c) பெரியபுராணம்‌
d) திருவிளையாடற்புராணம்‌