சிற்றிலக்கியங்கள்‌ (PYQ)

1) “பிள்ளைத்தமிழ்‌” என்ற பெயரில்‌ ஒரு தனிநூலினைச்‌ செய்த முதல்‌ ஆசிரியர்‌ யார்‌?

a) ஒட்டக்கூத்தர்‌
b) புகழேந்தி
c) குமரகுருபரர்‌
d) பகழிக்கூத்தர்‌

2) “வெப்பத்‌ தடுகளத்து வேழங்க ளாயிரமும்‌
கொப்பத்‌ தொருகளிற்றால்‌ கொண்டோன்‌” – இவ்வரிகள்‌ யாரைக்‌ குறிப்பிடுகிறது?

a) இராசேந்திரன்‌
b) முதல்‌ இராசராசன்‌
c) இராசாதிராசன்‌
d) இராசமகேந்திரன்‌

3) முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்‌

a) குமரகுருபரர்‌
b) பலபட்டடைச்‌ சொக்கநாதர்‌
c) சேக்கிழார்‌
d) சிவஞான சுவாமிகள்

4) சிற்றிலக்கிய வகைகளைக்‌ கூறாத பாட்டியல்

a) வரையறுத்தப்‌ பாட்டியல்‌
b) பிரபந்த மரபியல்‌
c) பன்னிரு பாட்டியல்
d) நவநீத பாட்டியல்

5) கெளடநெறிப்‌ புலவர்‌ என அழைக்கப்படுபவர்‌

a) ஒட்டக்கூத்தர்‌
b) காளமேகம்‌
c) எல்லப்ப நாவலர்‌
d) எவரும்‌ இல்லை

6) கீழுள்ளவற்றுள்‌ பரஞ்சோதி முனிவர்‌ இயற்றாத நூல்‌ எது?

a) திருவிளையாடற் புராணம்‌
b) திருவிளையாடற்‌ போற்றிக்‌ கலிவெண்பா
c) மதுரைப்‌ பிதிற்றுப்பத்தந்தாதி
d) நான்முகன்‌ அந்தாதி

7) “ஆனை ஆயிரம்‌ அமரிடை வென்ற
மானவ னுக்கு வகுப்பது பரணி” – எனக்‌ கூறும்‌ நூலின்‌ பெயர்‌ யாது?

a) கலிங்கத்துப்‌ பரணி
b) திராவிடத்துப்‌ பரணி
c) பன்னிரு பாட்டியல்‌
d) முத்தொள்ளாயிரம்‌

8) ‘முக்கூடற்‌ பள்ளு’ நூலில்‌ இடம்பெறாத ஆறு

a) தாமிரபரணியாறு
b) கோதண்டராம ஆறு
c) தண்பொருநை ஆறு
d) சிற்றாறு

9) “வையக மெல்லா மெம தென் றெழுதுமே” என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன்‌ யார்‌?

a) சேரன்‌
b) பல்லவன்‌
c) சோழன்‌
d) பாண்டியன்‌

10) உழத்தி பாட்டு என்று அழைக்கப்படுவது

a) தூது
b) உலா
c) குறவஞ்சி
d) பள்ளு