மனோன்மணியம்‌ – பாஞ்சாலி சபதம்‌ – குயில்‌ பாட்டு – இரட்டுறமொழிதல்‌ (காளமேகப்புலவர்‌) – அழகிய சொக்கநாதர்‌ தொடர்பான செய்திகள்‌ (PYQ)

1) காந்திமதியின்‌ வருகைப்‌ பருவத்துப்‌ பாடலுக்காக வைரக்கடுக்கனைப்‌ பரிசாகப்‌ பெற்ற புலவர்‌ யார்‌?

a) சிவஞான முனிவர்‌
b) பலபட்டடைச்‌ சொக்கநாதர்‌
c) அழகிய சொக்கநாதர்‌
d) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

2) ‘கவி காளமேகம்‌’ எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்‌?

a) சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்‌
b) சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்‌
c) வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்‌
d) வைணவத்திலிருந்து பெளத்தத்திற்கு மாறினார்‌

3) “கொம்பினையொத்த மடப்பிடி” யார்‌?

a) கண்ணகி
b) சீதை
c) திரெளபதி
d) மாதவி

4) ‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’ எண்று பாராட்டப்பட்டவர்‌ யார்?

a) பாரதிதாசன்‌
b) கண்ணதாசன்‌
c) பாரதியார்‌
d) வாணிதாசன்‌

5) நடிப்புச்‌ செவ்வியும்‌ இலக்கியச்‌ செவ்வியும்‌ ஒருங்கே அமையப்‌ பெற்ற காப்பியம்‌ எது?

a) சிலப்பதிகாரம்‌
b) பாஞ்சாலி சபதம்‌
c) மனோன்மணியம்‌
d) மணிமேகலை

6) பாரதியின்‌ படைப்பில்‌ இசையின்‌ பெருமை பேசும்‌ நூல்‌ எது?

a) கண்ணன்‌ பாட்டு
b) குயில்‌ பாட்டு
c) பாப்பா பாட்டு
d) பாஞ்சாலி சபதம்‌

7) ‘நீடு துயில்‌ நீக்க பாட வந்த நிலா’ என்ற தொடரால்‌ அழைக்கப்பெறுபவர்

a) பாரதிதாசன்‌
b) கவிமணி
c) பாரதியார்‌
d) புகழேந்திப்புலவர்

8) “அந்தணர்‌ வளர்க்கும்‌ வேள்வித்‌ தீயைவிட
தேசபக்தி நெஞ்சத்தில்‌ வளர்க்கும்‌ தீயே
தேவர்கள்‌ விரும்புவது” – இக்கருத்துடைய பாடலடியின்‌ ஆசிரியர்‌ யார்‌?

a) பாரதியார்‌
b) சுந்தரம்பிள்ளை
c) கவிமணி
d) பாரதிதாசன்‌

9) பாஞ்சாலி சபதத்தின்‌ பிரிவுகள்‌ பாடல்கள்‌ எண்ணிக்கையில்‌ பின்வருவனவற்றுள்‌ எது சரியானது?

a) மூன்று பாகங்கள்‌, 4 சருக்கங்கள்‌, 400 பாடல்கள்‌
b) இரண்டு பாகங்கள்‌, 5 சருக்கங்கள்‌, 412 பாக்கள்‌
c) இரண்டு பாகங்கள்‌, 7 சருக்கங்கள்‌, 450 பாக்கள்‌
d) நான்கு பாசங்கள்‌, 5 சருக்கங்கள்‌, 415 பாக்கள்‌

10) கீழ்க்கண்டவற்றுள்‌ பாஞ்சாலிசபதத்திற்குரிய உட்பிரிவுகளைத்‌ தேர்க

a) 92 படலங்கள்‌, 5027 பாடல்கள்‌
b) 12 சருக்கங்கள், 2330 பாடல்கள்‌
c) 5 சருக்கங்கள்‌, 412 பாடல்கள்‌
d) 10 சருக்கங்கள்‌, 994 பாடல்கள்‌