பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு (வாரான்‌ – வருகிறான்‌) (PYQ)

1) எழுத்து வழக்கில்‌ அமைந்துள்ள வாக்கியங்களைக்‌ கண்டறிக
I) நானும்‌ அவனும்‌ உள்ளே சென்றோம்‌
II) “எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை” என்றான்‌
III) “மிதிவண்டியில அவ்ளோ தூரம்‌ போகலாமா ?”
IV) “ஏன்‌ முடியாது ?”

a) I, II மட்டும்‌
b) II, III, IV மட்டும்‌
c) I மட்டும்‌
d) I, IV மட்டும்‌

2) வாயில்‌ என்னும்‌ சொல்லைப்‌ பேச்சு வழக்கில்‌ எவ்வாறு வழங்குகிறோம்‌?

a) இல்முன்‌
b) வாயில்‌
c) வாசல்‌
d) முன்றில்‌

3) பேச்சு வழக்கு-எழுத்து வழக்கு. சரியான எழுத்து வழக்கைத்‌ தேர்ந்தெடு

a) வரிசையாக நில்‌
b) வரிசையாக நில்லு
c) வரிசையாக நின்னுக்கோ
d) வரிசையாக நின்னிட்டியா

4) பேச்சு வழக்குத்‌ தொடருக்கு இணையான எழுத்து வழக்குத்‌ தொடரினை எழுது.
காலை உணவை சாப்ட்டியா?

a) காலை உணவை சாப்டியா?
b) காலை உணவைச்‌ சாப்பிட்டாயா?
c) காலை உணவு சாப்டாச்சா?
d) காலை உணவு ஆச்சுதா?

5) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று
வந்துடறேன்‌

a) வந்து விடுகிறேன்‌
b) வந்து தருகிறேன்‌
c) வந்து விட்டேன்‌
d) வந்து ஓடுகிறேன்‌

6) பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
பேப்பரப்‌ படிச்சிக்கிட்டு இரு.

a) பேப்பரப்‌ படித்துக்கொண்டு இரு
b) செய்தித்தாளை படித்துக்கொண்டு இரு
c) காகிதத்தை படிச்சிக்கிட்டு இரு
d) காகிதத்தை படிச்சிட்டு இரு

7) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.
‘வவுத்து வலி’

a) வருத்து வலி
b) வயற்று வலி
c) வயிற்று வலி
d) வவுறு வலி

8) பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
பின்வருவனவற்றுள்‌ பேச்சு வழக்கு அல்லாத தொடரைக்‌ கண்டறிக

a) முருகா, வந்தியா?
b) முருகா, வண்ட்டியா?
c) முருகா, வந்துவிட்டாயா?
d) முருகா, வந்துட்டியா?

9) கீழ்வருவனவற்றுள்‌ பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொற்களை கண்டுபிடி.

a) வருவியா? – வந்ததா?
b) வந்தாய்‌ – வருவாய்‌
c) வந்தியா? – வந்தாயா?
d) வருகிறாய்‌ – வருவாய்‌

10) வாயில்‌ என்னும்‌ சொல்லைப்‌ பேச்சு வழக்கில்‌ ———— என வழங்குகிறோம்‌.

a) கதவு
b) நிலைப்படி
c) நுழையும்‌ வழி
d) வாசல்‌

TNPSC Master