பிரித்தெழுதுக (PYQ)

1) பிரித்தெழுதுக : நெடுநாவாய்

a) நெடு + நாவாய்‌
b) நெடுமை + நா + வாய்‌
c) நெடுமை + நாவாய்‌
d) நெடுநா + வாய்

2) பிரித்தெழுதுக : கரியன்‌

a) கரு + அன்‌
b) கருமை + அன்‌
c) கரிய + அன்‌
d) கரி + அன்‌

3) செழுங்கனித்தீஞ்சுவை என்ற சொற்றொடர்‌ சரியாகப்‌ பிரிக்கப்பட்டிருப்பது எது?

a) செழுமை + கனி + தீஞ்சுவை
b) செழும் + கனி + தீஞ்சுவை
c) செழும்‌ + கனி + தீம்‌ + சுவை
d) செழுமை + கனி + தீம் + சுவை

4) பிரித்தெழுதுக – குருகுமுண்டு

a) குருகு + முண்டு
b) குருகு + உண்டு
c) குருகும்‌ + உண்டு
d) குருமை + உண்டு

5) பிரித்தெழுதுக – வல்லுயிர்‌

a) வல்‌ + உயிர்‌
b) வன்மை + உயிர்‌
c) வல்லு + உயிர்‌
d) வலிமை + உயிர்‌

6) தவறான பிரித்தறிதலைக்‌ கண்டறிக

a) அங்கன்‌ – அம் + கண்‌
b) காண்டகு – காண் + தகு
c) புன்கண்‌ – புன்மை + கண்‌
d) தீதிலா – தீமை + இலா

7) பகுபத உறுப்பிலக்கணம்‌ அமைப்புப்படி தவறான பிரித்தறிதலை கண்டறிக

a) உணர்மின்‌ = உணர் + மின்
b) ஏகுமின்‌ = எகு + மின்‌
c) சொல்லின்‌ = சொல்லு + மின்
d) பூட்டுமின்‌ = பூட்டு + மின்‌

8) பிரித்தெழுதுக – ஆரளவு

a) அரும்‌ + அளவு
b) அருமை + அளவு
c) ஆர்‌ + அளவு
d) ஆரும்‌ + அளவு

9) பிரித்தெழுதுக : வெந்நீர்

a) வெண்மை + நீர்‌
b) வெம்மை + நீர்‌
c) வெம்‌ + நீர்‌
d) வெண்‌ + நீர்‌

10) பிரித்தெழுதுக : அறைந்தறைந்து

a) அறை + அறந்து
b) அறைந்து + அறைந்து
c) அறை + அறை + அறைந்து
d) அறைதல்‌ + அறைந்து