1) பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை – கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக கண்டறிக
a) பரிந்து x வெறுத்து
b) பரிந்து x விரும்பி
c) தெரிந்து x உணர்ந்து
d) தெரிந்து x ஆராய்ந்து
2) கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர்மேல் எழுத்திற்கு நேர்”
a) நல்லார் x தீயார்
b) உபகாரம் x உபத்திரவம்
c) ஈரம் x காய்ந்த
d) காணுமே x காணாதே
3) முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?
a) செலுத்தினான்
b) நிறுத்தினான்
c) வளைத்தான்
d) முரித்தான்
4) கீழ்க்கண்டவற்றுள் எது எதிர்ச்சொல் இல்லை?
a) பொய்யாமை x பொய்த்தல்
b) ஏய்க x எய்யாதே
c) தீதும் x நன்றும்
d) தொன்மை x பழமை
5) கீழ்க்கண்டவற்றுள எது எதிர்ச்சொல் இல்லை?
a) உண்மை x இன்மை
b) அண்மை x சேய்மை
c) தண்மை x வெம்மை
d) வன்மை x வலிமை
6) கீழ்வரும் குறளிலுள்ள எதிர்ச்சொல் யாது?
“அஞ்சுவ தஞ்சாமை பேதைமை ஆஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்”
a) அறிவார் x ஆஞ்சாமை
b) அஞ்சுவது x பேதைமை
c) பேதைமை x தொழில்
d) அஞ்சுவது x அஞ்சாமை
7) கீழ்வரும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எசிர்சொல் இல்லை?
“நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச்
சொல் எதிர் பெறா அன் சொல்லி இன்புறல்
புல்லித்தோன்றும் கைக்கிளைக் குறிப்பே”
a) நன்மை x தீமை
b) கைக்கிளை x ஒருதலைக்காமம்
c) தன்னொடு x பிறரொடு
d) இன்புறல் x துன்புறல்
8) எது எதிர்ச்சொல்?
“வைதோரைக் கூட வையாதே – இந்த
வைய முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணில் பறவைகள் மீதில் எய்யாதே”
a) பொய்த்தாலும் x பொய்யாதே
b) பொய்த்தாலும் x செய்யாதே
c) பொய்த்தாலும் x வையாதே
d) பொய்த்தாலும் x எய்யாதே
9) கீழ்க்கண்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
a) செய்தக்க x செய்யாமை
b) தலையாயது x முதன்மையானது
c) பற்றுக x பற்றுவிடல்
d) இயங்கா x இயங்குதல்
10) கீழ்க்கண்ட சொற்களுள் எது எதாரசலசால் இல்லை?
a) தலைப்பட்டன x தடைபட்டன
b) பயிலுதல் x பயிற்றுதல்
c) ஏற்புரை x மறுப்புரை
d) பாஷையறிவுடையார் x சாதுரியமாகப் பேசுவோர்