1) செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக
a) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
b) தச்சன் நாற்காலியைச் செய்தான்
c) நாற்காலியைச் செய்தவன் தச்சன்
d) நாற்காலியைத் தச்சன் செய்தான்
2) செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக
a) வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
b) தொல்காப்பியம் வ.உ.சியால் பதிப்பிக்கப்பட்டது
c) பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
d) வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
3) பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக :
a) முருகன் சிலப்பதிகாரத்தைப் படித்தான்
b) முருகன் சிலப்பதிகாரத்தைப் படிப்பித்தான்
c) சிலப்பதிகாரம் முருகனால் படிக்கப்பட்டது
d) சிலப்பதிகாரத்தைப் படித்தவன் முருகன்
4) செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக :
a) பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்
b) குயில்பாட்டு பாரதியாரால் பாடப்பட்டது
c) குயில் பாட்டைப் பாடினார் பாரதியார்
d) குயில் பாட்டைப் பாடியவர் பாரதியார்
5) பின்வருவனவற்றுள் செயப்பாட்டுவினை அல்லாதது எது?
a) செல்வம் அரசர்களால் கைப்பற்றவும் படும்
b) கல்வி நுண்பொருளாகையால் கவரப்படமாட்டாது
c) உயர்ந்த அறிவுடையோரால் அருளிச் செய்யப்பெற்றன
d) கல்வி நுண்பொருளாகையால் வெள்ளத்தில் அழியாது
6) பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் – இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
a) பிறவினை
b) தன்வினை
c) கலவை
d) செய்யப்பாட்டு வினை
7) தன்வினையைத் தேர்ந்து எழுதுக
a) அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
b) அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
c) அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
d) அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
8) பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக:
a) தேன்மொழி பாடம் படித்தாள்
b) தேன்மொழி பாடம் பயிற்றுவித்தாள்
c) தேன் மொழியால் பாடம் பயிற்றுவிக்கப்பட்டது
d) தேன்மாழி பாடம் பயிலாள்
9) தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
a) சீதை புத்தாடை அணிவித்தாள்
b) சீதை புத்தாடை அணிந்தாள்
c) புத்தாடை சீதையால் அணிவிக்கப்பட்டது
d) சீதை புத்தாடை அணியாள்
10) செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
a) நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்
b) நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது
c) வளர்த்தனர் நாட்டுப்பற்றை நாடகக் கலைஞர்கள்
d) நாட்டுப்பற்றை நாடகக் கலைஞர் வளர்ப்பார்