1) கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல – என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
a) இன்பம்
b) வருமுன் காத்தல்
c) மகிழ்ச்சி
d) துன்பம்
2) ‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
a) பகர்தல்
b) கலத்தல்
c) வீணாதல்
d) ஏமாறல்
3) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க.
“நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணியராயினும்”
a) வெறுப்பூட்டுவர்
b) உதவமாட்டார்
c) துன்புறுத்துவர்
d) நட்புகொள்ளார்
4) கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் உவமை யாது?
“பற்றுக்கோடற்ற”
a) மழை காணாப்பயிர்
b) கீரியும் பாம்பும்
c) அடியற்ற மரம்
d) உள்ளங்கை நெல்லிக்கனி
5) பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
உலக நிலைகளை அறியாதிருத்தல்
a) கீரியும் பாம்பும் போல
b) இலவு காத்த கிளி போல
c) கிணற்றுத் தவளை போல
d) அனலிடைப்பட்ட புழு போல
6) உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
கொக்கொக்க கூம்பும் பருவத்து
a) காத்திருத்தல்
b) வெறுத்திருத்தல்
c) அறியாதிருத்தல்
d) மறந்திருத்தல்
7) உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்து எழுதுக
‘அத்தி பூத்தாற் போல்’
a) தெரிந்த நிலை
b) உணர்ந்த நிலை
c) அறிகுறி அறியாத நிலை
d) எப்பொழுதும் பார்க்கும் நிலை
8) பொருத்தமான உவமைத் தொடரைத் தேர்க
a) மறை இலை காய் போல
b) இலை மறை காய் போல
c) காய் இலை மறை போல
d) மறை போல இலை காய்
9) ‘மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல’
a) தயங்குதல்
b) மயங்குதல்
c) நாணுதல்
d) திகைத்தல்
10) நான் மீன் விரவிய கோன் மீன் போல் உவமைகள் விளக்க பெறும் பொருத்தமான பொருள் யாது?
a) பொருந்திய
b) பொருந்தாமல்
c) தூரமாக
d) பொருத்தம்