1) “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” – என்று எடுத்துரைத்தவர்
a) காந்தியடிகள்
b) கல்யாணசுந்தரனார்
c) முத்துராமலிங்கர்
d) விவேகானந்தர்
2) உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று முத்தாய்ப்பாய் நம் உள்ளத்தில் நறுந்தேனைப் பெய்வித்தவர்
a) அயோத்திதாசப் பண்டிதர்
b) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
c) ந.மு. வேங்கடசாமி நாட்டார்
d) உ.வே. சுவாமிநாத ஐயர்
3) மும்பையில் 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தைத் தோற்றுவித்தவர் இவர்
a) அண்ணல் அம்பேத்கர்
b) மகாத்மா காந்தி
c) சர்தார் வல்லபாய் பட்டேல்
d) வினோபாபாவே
4) அயோத்திதாசர் ‘ஆதிவேதம்’ என்னும் நூலை எழுத எந்நூலைச் சான்றாகக் கொள்ளவில்லை?
a) நன்னூல் விளக்கம்
b) தொன்னூல் விளக்கம்
c) வீரசோழியம்
d) மச்சமுனிவர் ஞானம்
5) விடை தேர்க :
பெண்களுக்குக் கல்வியும், சொத்துரிமையும் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் பேசியும், எழுதியும் வந்தவர்
a) பெரியார்
b) பாரதியார்
c) பாரதிதாசன்
d) வாணிதாசன்
6) வினாவிற்குரிய விடை எழுதுக:
காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?
a) கல்விப் பணி ஆற்றிய நாள்
b) கல்வி வளர்ச்சி நாள்
c) தொழில் முன்னேற்ற நாள்
d) தேசிய கல்வி நாள்
7) வினாவிற்குரிய விடை எழுதுக
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
a) 1927
b) 1936
c) 1895
d) 1946
8) உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
a) வாக்குரிமை
b) பேச்சுரிமை
c) சொத்துரிமை
d) எழுத்துரிமை
9) மாமேதை என இந்திய சட்டத்துறையில் அழைக்கப்பெற்றவர்
a) காந்தியடிகள்
b) நேரு
c) அம்பேத்கர்
d) இராஜாஜி
10) மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் – எனக் கூறியவர்
a) இராமலிங்க அடிகள்
b) இரா.பி.சேதுப்பிள்ளை
c) நாமக்கல் – இராமலிங்கம் பிள்ளை
d) முத்துராமலிங்கத் தேவர்