தமிழின்‌ தொன்மை – தமிழ்மொழியின்‌ சிறப்பு, திராவிட மொழிகள்‌ தொடர்பான செய்திகள் (PYQ)

1) கோடிட்ட இடத்தை நிரப்புக
தமிழ்மொழி ———— ஒலிகளைக் கொண்டுள்ளது

a) முப்பது
b) ஐந்நூறு
c) இருநூற்று நாற்பத்தேழு
d) அறுநூறு

2) “பிராகுயி முதலிய வடபுல மொழிகளுக்கும்‌ தாயாக விளங்குவது தமிழே” என்று கூறியவர்‌

a) டாக்டர்‌ ராபர்ட்‌ என்‌. கஸ்ட்‌
b) டாக்டர்‌ ஸ்டெங்‌ கெனோவின்‌
c) டாக்டர்‌ கால்டுவெல்‌
d) டாக்டர்‌ எமினோ

3) உரிய விடையைத்‌ தேர்க
தமிழை ஆட்சி மொழியாகக்‌ கொண்டுள்ள வெளிநாடுகள்‌

a) இலங்கை, சிங்கப்பூர்‌ மலேசியா
b) தென்‌ அமெரிக்கா, கனடா, பிரான்சு
c) மொரிஷியஸ்‌ தீவு, பினாங்குத்‌ தீவு, பிஜித்‌ தீவுகள்‌
d) அயர்லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து

4) கோடிட்ட இடத்தை நிரப்புக:
நிகண்டுகளில்‌ மிகப்‌ பழமையானது ————

a) சேந்தன்‌ திவாகரம்‌
b) சூடாமணி நிகண்டு
c) அகராதி
d) இதில்‌ எதுவும்‌ இல்லை

5) உரிய விடையைத்‌ தேர்க
அகராதி என்னும்‌ சொல்லை முதன்‌ முதலாக கையாண்டவர்‌ யார்‌?

a) திருமூலர்‌
b) வீரமாமுனிவர்‌
c) திருநாவுக்கரசர்‌
d) கம்பர்‌

6) “மனித நாகரிகத்தின்‌ தொட்டில்‌” என அழைக்கப்படுவது எது?

a) ஆப்பிரிக்கா
b) இலெமூரியா
c) சிந்து சமவெளி
d) ஹரப்பா

7) ‘திராவிடம்‌’ என்னும்‌ சொல்லை முதன்‌ முதலில்‌ உருவாக்கியவர்‌

a) பெரியார்‌
b) குமரிலபட்டர்‌
c) கால்‌டுவெல்‌
d) ஜி.யு.போப்‌

8) ‘WhatsApp’ என்ற சொல்‌, பார்க்கவும்‌ கேட்கவும்‌, படிக்கவுமான மின்னஞ்சல்‌ குறுஞ்செய்தி வசதியை முனைவர்‌ ம.இராசேந்திரன்‌ ———— என மொழி பெயர்த்துள்ளார்‌

a) தூதுலாலி
b) கட்செவி அஞ்சல்‌
c) எண்ண நகலி
d) நூது செயலி

9) சூடாமணி நிகண்டு – ஆசரியர்‌

a) திவாகர முனிவர்‌
b) பிங்கலம்‌
c) வீரமண்டல புருடர்
d) காங்கேயர்‌

10) “மொழிகளின்‌ காட்சிச்‌ சாலை இந்தியா” – இக்கூற்று யாருடையது?

a) பேராசிரியர்‌ ச.அகத்தியலிங்கம்‌
b) பேராசிரியர்‌ பெ.சுந்தரம்‌ பிள்ளை
c) பேராசிரியர்‌ சாலை. இளந்திரையன்‌
d) பேராசிரியர்‌ சாலமன்‌ பாப்பையா