1) துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
a) மீரா
b) முடியரசன்
c) கண்ணதாசன்
d) பெருஞ்சித்திரனார்
2) உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு
a) இந்தியா
b) குயில்
c) தமிழ்ச்சிட்டு
d) மணிக்கொடி
3) விடைத்தேர்க
“வீறுடை செம்மாழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி” – என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் யார்?
a) பெருஞ்சித்திரனார்
b) பரிதிமாற் கலைஞர்
c) பாரதியார்
d) மறைமலையடிகள்
4) தேவநேயப் பாவாணர் தமிழன்னைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இறுதியக சொற்பொழிவு நிகழ்த்திய இடம் எது?
a) சென்னை
b) மதுரை
c) கோவை
d) தஞ்சை
5) உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க பெருஞ்சித்திரனார் வெளியிட்ட இதழ்களுள் ஒன்று
a) தென்றல்
b) தென்மொழி
c) குயில்
d) மணிக்கொடி
6) விடை தேர்க :
“தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்?
a) மறைமலையடிகள்
b) தேவநேயப் பாவாணர்
c) பரிதிமாற் கலைஞர்
d) பெருஞ்சித்திரனார்
7) வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
a) பரிதிமாற் கலைஞர்
b) மு.வரதராஜன்
c) தேவநேயப் பாவாணர்
d) புதுமைப்பித்தன்
8) “பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?
a) அப்துல் ரகுமான்
b) வாணிதாசன்
c) முடியரசன்
d) துரை மாணிக்கம்
9) எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு – எனக் கூறியவர்
a) பாவாணர்
b) காந்தி
c) தெ.பொ.மீ
d) அயோத்திதாசப்பண்டிதர்
10) பாவலரேறு என அழைக்கப்படுபவர்
a) தேவநேயப்பாவாணர்
b) பெருஞ்சித்திரனார்
c) சுப்புரத்தினதாசன்
d) வெ. இராமலிங்கனார்