1) ———— is the change in the position of an object with respect to its surroundings
a) Motion
b) Force
c) Laws
d) Viscosity
1) ———— என்பது ஒரு பொருளின் சுற்றுப்புறத்தைப் பொறுத்து அதன் நிலையில் ஏற்படும் மாற்றம் ஆகும்
a) இயக்கம்
b) விசை
c) விதிகள்
d) குழைம நிலை
2) Motion along a straight line is called ————
a) Circular motion
b) Oscillatory motion
c) Linear motion
d) Random motion
2) நேர்கோட்டில் செல்லும் பொருளின் இயக்கம் ———— எனப்படுகிறது
a) வட்ட இயக்கம்
b) அலைவு இயக்கம்
c) நேரான இயக்கம்
d) ஒழுங்கற்ற இயக்கம்
3) Motion along a circular path is called ————
a) Circular motion
b) Oscillatory motion
c) Linear motion
d) Random motion
3) வட்டப்பாதையில் செல்லும் பொருளின் இயக்கம் ———— எனப்படுகிறது
a) வட்ட இயக்கம்
b) அலைவு இயக்கம்
c) நேரான இயக்கம்
d) ஒழுங்கற்ற இயக்கம்
4) Repetitive to and fro motion of an object at regular intervals of time is called ————
a) Circular motion
b) Oscillatory motion
c) Linear motion
d) Random motion
4) ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம் ———— எனப்படுகிறது
a) வட்ட இயக்கம்
b) அலைவு இயக்கம்
c) நேரான இயக்கம்
d) ஒழுங்கற்ற இயக்கம்
5) An object is said to be in ———— if it covers equal distances in equal intervals of time
a) Linear motion
b) Random motion
c) Circular motion
d) Uniform motion
5) ஒரு பொருள் நகரும் பொழுது சமமான தொலைவுகளை சமகால இடைவெளிகளில் கடந்தால் அது ———— த்தை மேற்கொண்டிருக்கிறது எனக் கூறலாம்
a) நேரான இயக்கம்
b) ஒழுங்கற்ற இயக்கம்
c) வட்ட இயக்கம்
d) சீரான இயக்கம்
6) An object is said to be in ———— if it covers unequal distances in equal intervals of time
a) Linear motion
b) Random motion
c) Non uniform motion
d) Uniform motion
6) ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது ———— த்தை மேற்கொண்டுள்ளது என்று கூறலாம்
a) நேரான இயக்கம்
b) ஒழுங்கற்ற இயக்கம்
c) சீரற்ற இயக்கம்
d) சீரான இயக்கம்
7) The actual length of the path travelled by a moving body irrespective of the direction is called the ———— travelled by the body
a) Distance
b) Displacement
c) Speed
d) Velocity
7) திசையைக் கருதாமல், ஒரு நகரும் பொருள் கடந்த பாதையின் நீளமே, அப்பொருள் கடந்த ———— எனக் கூறலாம்
a) தொலைவு
b) இடப்பெயர்ச்சி
c) வேகம்
d) திசைவேகம்
8) How is distance measured in the SI system?
a) litre
b) metre
c) gram
d) None of the above
8) SI முறையில் தொலைவை அளக்கப் பயன்படும் அலகு எது?
a) லிட்டர்
b) மீட்டர்
c) கிராம்
d) மேலே உள்ள எதுவும் இல்லை
9) ———— is defined as the change in position of a moving body in a particular direction
a) Distance
b) Displacement
c) Speed
d) Velocity
9) ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றமே ———— ஆகும்
a) தொலைவு
b) இடப்பெயர்ச்சி
c) வேகம்
d) திசைவேகம்
10) Distance is a ———— quantity
a) Non uniform
b) Uniform
c) Vector
d) Scalar
10) தொலைவு ———— அளவுரு ஆகும்
a) சீரற்ற
b) சீரான
c) திசையளவுரு
d) திசையிலி