1) பொருந்தா இணையைத் தேர்க [சொல் – பொருள்]
a) மா – அழகு
b) மீ – உயர்ச்சி
c) மூ – மூப்பு
d) மை – மேம்பாடு
2) பொருந்தா இணையைக் கண்டறிக
a) தினம் – நாள்
b) நெருநல் – நேற்று
c) சலவர் – நல்லவர்
d) மாரன் – மன்மதன்
3) பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு [செரு – செறு]
a) சண்டை – வயல்
b) போர் – சிறிய
c) போர்க்களம் – குளம்
d) கோபப்படு – போரிடு
4) பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் – இத்தாடரில் “புயல்” – என்னும் சொல்லிற்கு பொருள்
a) வானம்
b) காற்று
c) மேகம்
d) நீர்
5) பொருந்தா இணையைக் கண்டறிக
a) சுவடி – நூல்
b) வெய்யோன் – திங்கள்
c) செட்டு – சிக்கனம்
d) சிந்தை – உள்ளம்
6) பொருத்துக [சொல் – பொருள்]
A) களபம் – 1) அம்பு
B) புயம் – 2) பெயர்
C) நாமம் – 3) சந்தனம்
D) பகழி – 4) தோள்
a) A-1, B-2, C-3, D-4
b) A-2, B-3, C-4, D-1
c) A-3, B-4, C-2, D-1
d) A-4, B-2, C-1, D-3
7) பொருத்துக [சொல் – பொருள்]
A) கேசரி – 1) துன்பம்
B) பூசுரம் – 2) குடை
C) கவிகை – 3) மலை
D) இடர் – 4) சிங்கம்
a) A-4, B-2, C-3, D-1
b) A-1, B-3, C-2, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-1, C-4, D-3
8) ‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொகுள்
a) தூய்மையானவர்
b) வஞ்சகர்
c) மென்மையானவர்
d) கடுமையானவர்
9) “நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ;
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ”
இச்செய்யுளில் வந்துள்ள ‘அவல்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
a) பள்ளம்
b) மேடு
c) பொரி வகை
d) அரிசி வகை
10) பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையைக் கண்டெடு [வெற்பு – வெட்பு]
a) கல் – சும்மா
b) மலை – சூடு
c) நோய் – மலை
d) வெறுப்பு – விருப்பு