1) ‘க’ – என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
a) அரசன்
b) காற்று
c) மயில்
d) காத்தல்
2) கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
a) சே – சோலை
b) சோ – சிவப்பு
c) கா – மதில்
d) மா – விலங்கு
3) பொருத்துக
A) கை – 1) துன்பம்
B) நோ – 2) கைப்பற்றுதல்
C) யா – 3) ஒழுக்கம்
D) வெள – 4) ஒருவகை மரம்
a) A-2, B-4, C-3, D-1
b) A-3, B-4, C-1, D-2
c) A-3, B-2, C-4, D-1
d) A-3, B-1, C-4, D-2
4) ‘வீ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி குறிக்காத பொருள்
a) காற்று
b) மலர்
c) கொல்
d) பறவை
5) சொல்லும் பொருளும் பொருத்துக :
A) கா – 1) பெருமை
B) கூ – 2) செயல்
C) கை – 3) நிலம்
D) கோ – 4) காப்பாற்று
a) A-1, B-3, C-2, D-4
b) A-4, B-3, C-2, D-1
c) A-2, B-3, C-4, D-1
d) A-3, B-2, C-1, D-4
6) பொருளறிந்து பொருத்துக:
A) ஓ – 1) கோபம்
B) மா – 2) சோலை
C) கா – 3) நீர் தாங்கும் பலகை
D) தீ – 4) திருமகள்
a) A-2, B-4, C-1, D-3
b) A-1, B-3, C-4, D-2
c) A-3, B-4, C-2, D-1
d) A-4, B-1, C-3, D-2
7) பொருத்துக:
A) ஊ – 1) தலைவன்
B) ஐ – 2) ஊன்
C) நொ – 3) கடவுள்
D) தே – 4) துன்புறு
a) A-1, B-4, C-3, D-2
b) A-2, B-1, C-4, D-3
c) A-4, B-3, C-2, D-1
d) A-3, B-1, C-2, D-4
8) ஒரெழுத்து ஒரு மொழியில் – கீழ்க்காணும் விடைகளில் எது தவறானது?
a) ஆ – மான்
b) ஏ – அம்பு
c) ஐ – கடவுள்
d) தூ – தூபம்
9) ‘ஓரெழுத்து ஒரு மொழியில்’ – கீழ்க்காண்பவற்றுள் எது பொருத்தமற்றது?
a) ஆ – நீர்
b) ஈ – கொடு
c) கோ – அரசன்
d) கா – சோலை
10) கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
a) கோ – குகன்
b) சோ – மகன்
c) சே – எருது
d) தா – விடை