வேர்ச்சொல்லைத்‌ தேர்வு செய்தல்‌, வேர்ச்சொல்லைக்‌ கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம்‌, வினையாலனணயும்‌ பெயர்‌, தொழிற்பெயரை உருவாக்கல்‌ (PYQ)

1) “உலகியலின்‌ அடங்களுக்கும்‌ துறைதோறும்‌ நூற்கள்‌” ‘அடங்கு’ என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினையெச்சத்தைத்‌ தேர்ந்து எழுதுக

a) அடங்கினான்‌
b) அடங்கி
c) அடங்கிய
d) அடங்கியவர்‌

2) செய்‌ – என்னும்‌ வேர்ச்‌சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயரைத்‌ தேர்ந்தெடு

a) செய்தீர்‌
b) செய்வாய்‌
c) செய்தவன்‌
d) செய்தான்‌

3) நில்‌ – என்னும்‌ வேர்ச்‌சொல்லின்‌ தொழிற்‌ பெயரைத்‌ தேர்ந்தெடு :

a) நின்று
b) நின்ற
c) நிற்க
d) நிற்றல்‌

4) ‘படிப்பித்தார்‌’ என்ற சொல்லின்‌ வேர்ச்சொல்லைக்‌ காண்க

a) படித்த
b) படிப்பி
c) படித்தல்
d) நிற்றல்

5) “செய்பவன்‌ கருவி நிலம்‌ செயல்‌ காலம்‌, செய்பொருள் ஆறும்‌ தருவது வினையே” – இதில்‌ வினை என்னும்‌ சொல்‌ குறிப்பது

a) தெரிநிலை வினைமுற்று
b) குறிப்பு வினைமுற்று
c) குறிப்புப்‌ பெயரெச்சம்‌
d) வினைமுற்று

6) வாழ்த்துவோம்‌ என்ற சொல்லின்‌ வேர்ச்‌சொல்லை எழுதுக

a) வாழ்‌
b) வாழ்த்துதல்‌
c) வாழ்த்து
d) வாழ்த்தும்‌

7) ‘வந்தான்‌’ என்னும்‌ வினைமுற்று ———— என வினையாலணையும் பெயராய் வரும்

a) வருவான்‌
b) வாரான்‌
c) வந்தவன்‌
d) வந்த

8) ‘பொறு’ என்னும்‌ வேர்ச்‌சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயரை தேர்ந்தெடு

a) பொறுத்தான்‌
b) பொறுத்து
c) பொறுத்தல்‌
d) பொறுத்தவர்‌

9) எடு – என்னும்‌ வேர்ச்‌சொல்லின்‌ வினையெச்சத்தை எழுதுக

a) எடுத்த
b) எடுத்தல்‌
c) எடுத்து
d) எடுத்தான்‌

10) வேர்ச்சொல்லை தெரிவு செய்‌ : கண்டனன்‌

a) கண்டு
b) கண்‌
c) காண்‌
d) கண்ட