இலக்கணக்‌ குறிப்பறிதல்‌ (PYQ)

1) கனி முன்‌ நேர்‌ வருவதும்‌ கனி முன்‌ நிரை வருவதும்‌

a) கலித்தளை
b) வஞ்சித்தளை
c) இயற்சீர்‌ வெண்டளை
d) வெண்சீர்‌ வெண்டளை

2) பின்வருவனவற்றுள்‌ ‘ஈறுபோதல்‌’ ‘இனமிகல்‌’ என்னும்‌ விதிகளின்படி புணராதது

a) நெடுங்கடல்‌
b) செங்கடல்‌
c) கருங்கடல்‌
d) கருங்குயில்‌

3) இலக்கணக்‌ குறிப்புச்‌ சொல்லைத்‌ தேர்க

a) திட்பம்‌
b) ஆட்டம்‌
c) கோடல்‌
d) பெறுதல்‌

4) கீழ்க்காணும்‌ சொற்களில்‌ தொழிற்பெயர்‌ அல்லாததை அறிக

a) அழுகை
b) தொல்லை
c) போக்கு
d) தொழுகை

5) பின்வரும்‌ இலக்கணக்‌ குறிப்புக்குரிய பொருந்தாதச்‌ சொல்லைத்‌ தேர்க – பண்புத்தொகை

a) மென்கண்‌
b) செய்வினை
c) நன்கலம்‌
d) அருவிலை

6) ‘நெறியினில்‌ உயிர்சேகுத் திடுவ’ – இதில்‌ ‘உயிர்செகுத்து’ எவ்விலக்கணத்தைச்‌ சார்ந்தது?

a) ஈறுகெட்ட எதிர்மறைட்‌ பெயரெச்சம்‌
b) வினையாலணையும்‌ பெயர்‌
c) வியங்கோள்‌ வினைமுற்று
d) இரண்டாம்‌ வேற்றுமைத்தொகை

7) தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக

a) நோயின்றி வாழ்கிறான்‌
b) மெல்ல நடந்தான்‌
c) நடந்து வந்தான்‌
d) நன்கு பாடினான்‌

8) ஈற்றயலடி ‘சிந்தடி’ பெற்று வரும்‌ பா வகை

a) நேரிசைச்‌ சிந்தியல்‌ வெண்பா
b) இன்னிசைச்‌ சிந்தியல்‌ வெண்பா
c) நிலைமண்டில ஆசிரியப்பா
d) நேரிசை ஆசிரியப்பா

9) இலக்கணக்‌ குறிப்பறிந்து பொருத்துக
A) வழிக்கரை – 1) வினைத்தொகை
B) கரகமலம்‌ – 2) உரிச்சொற்றொடர்‌
C) பொங்குகடல்‌ – 3) ஆறாம்‌ வேற்றுமைத்தொகை
D) உறுவேனில்‌ – 4) உருவகம்‌

a) A-3, B-2, C-4, D-1
b) A-3, B-1, C-2, D-4
c) A-3, B-4, C-1, D-2
d) A-2, B-3, C-4, D-1

10) பின்வரும்‌ இலக்கணக்‌ குறிப்புக்குப்‌ பொருந்தாத சொல்லைக்‌ கண்டறிக – பண்புத்தாகை

a) நற்றிறம்
b) நன்மொழி
c) செம்மொழி
d) தேன்மொழி