விடைக்கேற்ற வினானவத்‌ தேர்ந்தெடுத்தல்‌ (PYQ)

1) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க :
‘பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் ’

a) பெற்றதை வழங்கி வாழும்‌ பெருங்குணத்தால்‌ பெறுவது எது?
b) பெற்றதை வழங்கி ஏன்‌ வாழ வேண்டும்‌?
c) பெருங்குணம்‌ எப்போது வரும்‌?
d) பெறுவது எது?

2) விடைக்கேற்ற வினாவைத்தேர்க.
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’

a) தமிழர்க்குப்‌ பெருமை தராதது எது?
b) நமக்குள்ளே பேசுவது எது?
c) பழங்கதைகளால்‌ என்ன நன்மை?
d) பழங்கதைகளின்‌ மகிமை யாது?

3) விடைக்கேற்ற வினாவைத் தேர்க
‘இரட்டைக்கிளவி இரட்டிற்‌ பிரிந்திசையா’

a) இரட்டைக்கிளவி இரட்டித்தால்‌ என்னவாகும்‌?
b) இரட்டைக்கிளவி எவ்விடத்தில்‌ வரும்?
c) இரட்டிற்‌ பிரிந்திசையாதது எது?
d) இரட்டிற்‌ பிரிந்திசைப்பது எது?

4) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க.
“கீழோர்‌ ஆயினும்‌ தாழ உரை”

a) தாழ உரைக்க வேண்டும்‌ – ஏன்‌?
b) கீழோர்‌ எப்படி இருக்க வேண்டும்‌?
c) கீழோரிடம்‌ எப்படிப்‌ பேச வேண்டும்‌?
d) கீழோர்க்கு நன்மை எது?

5) பின்வரும்‌ விடைக்கு ஏற்ற வினாத்தொடர்‌ எது?
செய்திப்‌ படங்கள்‌ வாயிலாக நிகழ்வுகளை நம்‌ இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்‌

a) நிகழ்வுகளை எங்கு கண்டுகளிக்கலாம்‌
b) தம் இருப்பிடத்தில் கண்டுகளிக்க கூடியன யாவை?
c) எதன்‌ வாயிலாக நிகழ்வுகளைத்‌ தம்‌ இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்‌?
d) செய்திப்படங்கள்‌ வாயிலாக எதனைக்‌ கண்டுகளிக்கலாம்‌?

6) “இது செய்வாயா?” என்பதற்கு நீயே செய்‌ என்று மொழியும்‌ விடை

a) உற்றது உரைத்தல்‌
b) உறுவது கூறல்‌
c) ஏவல்‌ விடை
d) வினா எதிர்‌ வினாதல்‌ விடை

7) விடைத்‌ தேர்க :
I) சிறந்த நூல்‌ எது? அந்நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?
II) அதுவா சிறந்த நூல்‌? அவரோ இயற்றினார்‌?
III) எ, யா என்னும்‌ வினாவெழுத்துகள்‌ சொல்லின்‌ முதலில்‌ நின்று வினாப்‌ பொருளைத்‌ தரும்‌
IV) ஆ, ஓ என்னும்‌ வினாவெழுத்து சொல்லின்‌ ஈற்றில்‌ நின்று வினாப்பொருளைத்‌ தரும்‌

a) I மற்றும்‌ II தவறு III மற்றும்‌ IV சரி
b) I சரி II தவறு III மற்றும்‌ IV சரி
c) I மற்றும்‌ II சரி III தவறு IV சரி
d) I, II, III, IV அனைத்தும்‌ சரி

8) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
‘அன்புள இனி நாம்‌ ஓர்‌ ஐவர்கள்‌ உளரானோம்‌’

a) எதனால்‌ ஐவரானார்கள்‌?
b) ஐவர்‌ யார்‌?
c) ஐந்தாவதாக வந்தவன்‌ யார்‌?
d) யாரிடம்‌ கூறினான்‌?

9) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க
‘தீண்டாமை மனிதநேயமற்ற செயல்‌’

a) தீண்டாமை எப்படிப்‌ பட்டது?
b) தீண்டாமையினால்‌ வரும்‌ கொடுமை என்ன?
c) மனித நேயமற்ற செயல்‌ எது?
d) மனித நேயம்‌ என்றால்‌ என்ன?

10) விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்க.
உறழ்‌ வெய்யோருக்கு உருசெரு எளிது

a) மிகுதியான போர்‌ யாருக்கு எளிதாக வாய்க்கும்‌?
b) பகையை விரும்புவது சரியா தவறா?
c) உறழ்‌ வெய்யோர்‌ யார்‌?
d) உருசெருவின்‌ பயன்‌ என்ன?