எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதுதல்‌ (PYQ)

1) தனிவாக்கியம்‌ குறித்து கீழ்க்கண்டவற்றுள்‌ சரியானது எது?

a) வினாப்பொருள்‌ தரும்‌ வாக்கியம்‌
b) ஓர்‌ எழுவாய்‌ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள்‌ ஒரு பயனிலையைக்‌ கொண்டு முடியும்‌
c) தனி வாக்கியங்கள்‌ பல தொடர்ந்து வரும்‌
d) ஒரு முதன்மை வாக்கியம்‌ ஒரு துணை வாக்கியத்துடன்‌ சேர்ந்து வரும்‌

2) வாக்கியங்களைக்‌ கவனி :
கூற்று (A) : எ.கா : “நான்‌ புத்தகம்‌ கொண்டு வருகிறேன்‌” என்று பவானி காயத்ரியிடம்‌ கூறினாள்‌.
காரணம்‌ (R) : ஒருவர்‌ கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள்‌ குறியீடு இடம்‌ பெறும்‌ தன்மை, முன்னிலைப்‌ பெயர்கள் இடம்பெறும் என்பது நேரக்கூற்று ஆகும்.

a) இவற்றுள்‌ (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி. மேலும்‌ (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
b) இவற்றுள்‌ (A) தவறு. ஆனால்‌ (R) சரி
c) இவற்றுள்‌ (A) சரி. ஆனால்‌ (R) தவறு
d) இவற்றுள்‌ (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, மேலும்‌ (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்‌

3) எவ்வகை வாக்கியம்‌?
மாணவன்‌ பாடம்‌ படித்திலன்‌

a) எதிர்மறைத்தொடர்‌
b) பொருள்‌ மாறா எதிர்மறைத்தொடர்‌
c) உடன்பாட்டுத்தொடர்‌
d) கலவைத்தொடர்‌

4) வாக்கிய அமைப்பினைக்‌ கண்டறிதல்‌
பள்ளிக்கல்வி இயக்குநர்‌ அறிவியல்‌ கண்காட்சியைத்‌ தொடங்கி வைத்தார்‌ – எவ்வகை வாக்கியம்‌ எனச்‌ சுட்டுக

a) தனி வாக்கியம்‌
b) கலவை வாக்கியம்‌
c) செயப்பாட்டு வினைவாக்கியம்‌
d) பிறவினை வாக்கியம்‌

5) ‘நேர்க்கூற்று’ குறித்து கீழ்க்கண்டவற்றுள்‌ தவறானது எது?

a) ஒருவர்‌ கூறியதை அவர்‌ கூறியபடியே கூறுவது
b) மேற்கோள்‌ குறியீடு இடம்‌பெறும்‌
c) தன்மை, முன்னிலைப்‌ பெயர்கள்‌ இடம்பெறும்‌
d) முன்னிலைப்‌ பெயர்கள்‌, படர்க்கைப்‌ பெயரில்‌ மாறி அமையும்‌

6) வாக்கிய அமைப்பினைக்‌ கண்டறிதல்‌ :
தீங்கின்றி நாடெல்லாம்‌ திங்கள்‌ மும்மாரி பெய்தது அந்தக்காலம்‌ – எவ்வகை வாக்கியம்‌ எனச்‌ சுட்டுக.

a) தன்வினை
b) செய்தி வாக்கியம்
c) நேர்க்கூற்று வாக்கியம்‌
d) கலவை வாக்கியம்‌

7) வாக்கியங்களைக்‌ கவனி :
கூற்று (A) : அனைவரும்‌ தாய்‌மொழியைப்‌ போற்றுக.
காரணம்‌ (R) : விழைவு வேண்டுதல்‌ வாழ்த்தல்‌, வைதல்‌ ஆகியவற்றுள்‌ ஒன்றைத்‌ தெரிவிக்கும்‌ வாக்கியம்‌ வியங்கோள்‌ வாக்கியம்‌
இவற்றுள்‌ :

a) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி. மேலும்‌ (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்‌ல
b) (A) சரி. ஆனால்‌ (R) தவறு
c) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி. மேலும்‌ (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்‌
d) (A) தவறு, ஆனால்‌ (R) சரி

8) நீடூழி வாழ்க – என்பது

a) விழைவுத்தொடர்‌
b) வினாத்தொடர்‌
c) உணர்ச்சித்‌ தொடர்‌
d) செய்தித்‌ தொடர்‌

9) எவ்வகை வாக்கியம்‌? எது கட்டளை வாக்கியம்‌?

a) நம்பி அயராது படித்ததால்‌ பள்ளியில்‌ முதல்‌ மாணவனாகத்‌ திகழ்ந்தான்‌
b) நீ தாய் மொழியைப் போற்று
c) தந்‌தை மகனிடம்‌ நன்குபடிக்கும்‌ படி கூறினார்‌
d) ஒவ்வொரு நாளும்‌ செய்திதாளைப்‌ படித்தல்‌ நல்லது

10) வாக்கிய அமைப்பினைக்‌ கண்டறிதல்‌:
வேலன்‌ நன்றாகப்‌ படித்ததால்‌ தேர்வில்‌ முதல்மதிப்பெண்‌ பெற்றான்‌ – எவ்வகை வாக்கியம்‌ எனச் சுட்டுக

a) உணர்ச்சி வாக்கியம்‌
b) உடன்பாட்டு வாக்கியம்‌
c) தன்வினை வாக்கியம்‌
d) கலவை வாக்கியம்‌