எதுகை, மோனை, இயைபு இவற்றுள்‌ எதேனும்‌ ஒன்றை தேர்ந்‌தெழுதுதல்‌ (PYQ)

1) “ஆர்பரவை அணிதிகழும்‌ மணிமுறுவல்‌ அரும்பரவை” – இப்பாடலடியில்‌ அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள்‌ எது தவறானது?

a) சீர்மோனை அமைந்துள்ளது
b) சீர்முரண்‌ அமைந்துள்ளது
c) சீர்‌ இயைபு அமைந்துள்ளது
d) கீழ்க்‌கதுவாய் மோனை அமைந்துள்ளது

2) தக்கர்‌ தகவுஇலர் என்பது அவரவர்‌
எச்சத்தாற்‌ காணப்படும்‌ – இக்குறளில்‌ அமைந்துள்ள தக்கார்‌ – எச்சத்தால்‌ என்ற இணை

a) அடிமுரண்‌
b) அடிமோனை
c) அடி இயைபு
d) இன எதுகை

3) ‘குணமென்னும்‌ குன்றேறி நின்றார்‌ வெகுளி
கணமேயும்‌ காத்தல்‌ அரிது’ – இக்குறளில்‌ அடி எதுகையாவது

a) குணமென்னும்‌ – குன்றேறி
b) குன்றேறி – நின்றார்
c) குணமென்னும்‌ – கணமேயும்‌
d) கணமேயும்‌ – காத்தல்‌

4) பின்வரும்‌ செய்யுள்‌ அடியில்‌ அமைந்துள்ள மோனைத்‌ தொடை விகற்பம்‌
வள்ளைக்‌(கு) உறங்கும்‌ வளநாட! வள்ளுவனார்‌

a) ஒரூஉ மோனை
b) பொழிப்பு மோனை
c) கூழை மோனை
d) மேற்கதுவாய்‌ மோனை

5) “தித்திக்குந் தெள்ளமுதாயத்‌ தெள்ளமுதின்‌”
கீழ்க்காணும்‌ விடைகளுள்‌ சரியான விடையை எது?

a) எதுகை மட்டும்‌ வந்துள்ளது
b) மோனை மட்டும்‌ வந்துள்ளது
c) எதுகை, மோனை இயைபு வந்துள்ளன
d) எதுகையும்‌, மோனையும்‌ வந்துள்ளன

6) ‘இடும்பைக்கு இடும்பைப்‌ படுப்பர்‌ இடும்பைக்கு
இடும்பைப்‌ படாஅ தவர்‌’ – குறளில்‌ அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக்‌ குறியிடு:

a) முற்று மோனை அமைந்துள்ளது
b) முற்று எதுகை அமைந்துள்ளது
c) முற்று இயைபு அமைந்துள்ளது
d) இவை அனைத்தும்‌

7) இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு
இக்குறளின்‌ அடிப்படையில்‌ பின்வரும்‌ கூற்றுகளுள்‌ எது தவறானது?

a) சீர்மோனை வந்துள்ளது
b) சீர் எதுகை வந்துள்ளது
c) அடி எதுகை வந்துள்ளது
d) இயைபு வந்துள்ளது

8) ஒன்றாமை ஒன்றியார்‌ கண்படின்‌ எஞ்ஞான்றும்‌
பொன்றாமை ஒன்றல்‌ அரிது – இக்குறளில்‌ அடி இயைபு

a) ஒன்றாமை – ஒன்றியார்‌
b) ஒன்றாமை – பொன்றாமை
c) ஒன்றாமை – எஞ்ஞான்றும்‌
d) பொன்றாமை – ஒன்றல்‌

9) வேரல்‌ வேலி வேர்க்கோட்‌ பலவின்‌ சாரல்‌ நாட செவ்வியை யாகுமதி
பின்வருவனவற்றுள்‌ மோனைக்குத்‌ தொடர்பில்லாதது எது?

a) வேரல்‌ – சாரல்‌
b) வேரல்‌ – வேலி
c) சாரல்‌ – செவ்வியை
d) வேலி – வேர்க்‌ கோள்‌

10) புல்லோடும்‌ கல்லோடும்‌ பொன்னோடும்‌ மணியோடும்‌
இப்பாடலடியைக்‌ கொண்டு பின்வருவனவற்றுள்‌ மிகச்‌ சரியானதைத்‌ தேர்ந்தெடு

a) முற்று எதுகை அமைந்துள்ளது
b) இணை மோனை அமைந்துள்ளது
c) இணை எதுகை அமைந்துள்ளது
d) மேற்சொன்ன மூன்றும்‌ அமைந்துள்ளது