1) சொற்களை வரிசைப்படுத்தி மறைந்த பழமொழியினைக் கண்டறிக
a) குப்பை துலங்க மேனி மேனி
b) மேனி குப்பை துலங்க மேனி
c) மேனி துலங்க குப்பை மேனி
d) துலங்க மேனி குப்பை மேனி
2) பொருத்தமான பழமொழியைக் கண்டறி
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
a) ஞாயிறைக் கைமறைப்பார் இல்
b) முள்ளினால் முள் களை மாறு
c) பாம்பு அறியும் பாம்பின் கால்
d) ஆற்று உணா வேண்டுவது இல்
3) ‘ஒளவையாரின் மீதூண் விரும்பேல்’ என்ற தொடருக்கு இணையான பழமொழியைத் தேர்ந்தெடு
a) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
b) நிறை குடம் தளும்பாது
c) அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு
d) நொறுங்கத் தின்றால் நூறு வயது
4) ‘Might is right’ – இதன் தமிழாக்கம்
a) கடமையே உரிமை
b) வல்லான் வகுத்ததே வாய்க்கால்
c) வலிமையே சரியான வழி
d) ஒற்றுமையே வலிமை
5) ‘Charity begins at home’ என்பதற்கு இணையான தமிழ்ப் பழமொழி
a) தன்கையே தனக்குதவி
b) அறநிலையம் வீட்டிலேயே துவக்கம்
c) தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்
d) வீட்டிலேயே தானம் செய்
6) பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க
தண்ணீர் ———— ஆனாலும் நெருப்பை அணைக்கும்
a) குறைவு
b) அழுக்கு
c) உப்பு
d) வெந்நீர்
7) கார்த்திகை மாசம் ———— கண்ட மாதிரி
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க
a) செடியை
b) பிறை
c) கொடியை
d) கடலை
8) பழமொழியை நிறைவு செய்க
குடல் கூழுக்கு அழுவுதாம் ————
a) நினைச்சதாம் கழுதை எடுத்ததாம்
b) கொண்டை பூவுக்கு அழுவுதாம்
c) அள்ளுறவன் பக்கத்தில் இருந்தாலும்
d) பதரு அரிசி ஆகுமா!
9) தட்டிப் போட்ட ரொட்டிக்கு புரட்டிப் போட ஆளு இல்லாம – இப்பழமொழியின் பொருள்
a) ஆள் பற்றாக்குறை
b) உண்பவர்கள் பலர்
c) நேரமின்றி உழைப்பது
d) ரொட்டி பற்றாக்குறை
10) பழமொழிகள்:
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” – இப்பழமொழி அமைந்த சரியான தொடரைத் தேர்ந்தெடு
a) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்
b) நோயற்ற வாழ்வு வாழ்வோம் குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து
c) குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்
d) நோயற்ற வாழ்வே குறைந்த செல்வம் என்பதை உணர்ந்து நோயுற்ற வாழ்வு