1) ‘ஏற்பாடு’ என்பதன் பொருள்
a) சூரியன் உதிக்கும் நேரம்
b) ஏற்றப்பாட்டுப் பாடுதல்
c) சந்திரன் தோன்றும் நேரம்
d) சூரியன் மறையும் நேரம்
2) ‘மூதூர்’ எத்திணைக்குரிய ஊர்?
a) மருதம்
b) பாலை
c) குறிஞ்சி
d) நெய்தல்
3) சரியானவற்றைத் தேர்க [பொருள் – திணை]
1) எதிரூன்றல் – வெட்சி
2) மீட்டல் – வஞ்சி
3) செருவென்றது – வாகை
4) எயில்காத்தல் – நொச்சி
a) 1ம், 2ம் சரி
b) 2ம், 3ம் சரி
c) 3ம், 4ம் சரி
d) 1ம், 4ம் சரி
4) ‘யாமம்’ என்பது ————
a) முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது
b) நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது
c) குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது
d) மருதத் திணைக்குரிய சிறுபொழுது
5) பின்வரும் சொற்களில் அமைந்த எழுத்துக்கள் பிறக்குமிடம் அறிந்து பொருத்துக :
A) மென்மை – 1) மார்பு
B) வளையல் – 2) மூக்கு
C) காக்கை – 3) கழுத்து
D) கஃறீது – 4) மார்பும் தலையும்
a) A-3, B-2, C-1, D-4
b) A-2, B-3, C-1, D-4
c) A-2, B-3, C-4, D-1
d) A-4, B-2, C-1, D-3
6) ஐந்திணைகளில் எத்திணையிலும் இடம்பெறாத சிறுபொழுது எது?
a) யாமம்
b) மாலை
c) காலை
d) எற்பாடு
7) ஆண்பாற் கூற்றும் பெண்பாற் கூற்றும் இடம் பெற்ற திணைகள்
a) வெட்சி, காஞ்சி
b) வெட்சி, கரந்தை
c) நொச்சி, உழிஞை
d) கைக்கிளை, பெருந்திணை
8) மாற்றரசன் நாட்டுக்குள் புகுந்து மதிலைக் கைப்பற்றுவது
a) உழிஞை
b) நொச்சி
c) தும்பை
d) வாகை
9) உணவுப் பொருளாக நெல் பயிரிடப்பெற்ற இரு திணைகள்
a) குறிஞ்சி, மருதம்
b) முல்லை, மருதம்
c) நெய்தல், மருதம்
d) குறிஞ்சி, முல்லை
10) பொருத்துக
A) எதிரூன்றல் – 1) வஞ்சி
B) அதிரப்பொருவது – 2) நொச்சி
C) வட்கார் மேற்செல்வது – 3) தும்பை
D) எயில் காத்தல் – 4) காஞ்சி
a) A-2, B-4, C-3, D-1
b) A-1, B-2, C-3, D-4
c) A-3, B-1, C-4, D-2
d) A-4, B-3, C-1, D-2