1) ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
a) அது இங்கே உள்ளவை
b) அவை இங்கே உள்ளது
c) அவை இங்கே உள்ளன
d) அது இங்கே உள்ளன
2) மரபுப் பிழையை நீக்குக
a) குயில் கத்தக் காகம் காகா என்றது
b) குயில் கூவக் காகம் கரைந்தது
c) குயில் கத்தக் காகம் கூவியது
d) குயில் கூவக் காகம் கத்தியது
3) பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுக
a) சகல மக்களும் வந்தனர்
b) சகல ஜனங்களும் வந்தனர்
c) சகலவாசிகளும் வந்தனர்
d) மக்கள் அனைவரும் வந்தனர்
4) ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
a) பஞ்சபாண்டவர் ஐவருமே சிறந்தவன்
b) பஞ்சபாண்டவர்கள் ஐவருமே சிறந்தவன்
c) பஞ்சபாண்வர்கள் ஐவருமே சிறந்தவர்கள்
d) மேற்கூறிய ஏதுவுமில்லை 38. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
5) ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?
a) மாடு மேய்ந்தன பயிரை
b) மாடு பயிரை மேய்ந்தன
c) மாடுகள் பயிரை மேய்ந்தது
d) மாடுகள் பயிரை மேய்ந்தன
6) வழூஉச் சொற்களை நீக்குக
a) தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்
b) தென்னை இலையால் கீத்து பின்னினான்
c) தென்ன ஓலையால் கீத்து பின்னினான்
d) தென்னை இலையால் கீற்று முடைந்தான்
7) பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தை தேர்க
a) அஞ்சலகம் சென்று தபால் வாங்கி வா
b) அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா
c) அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வங்கி வா
d) அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா
8) மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
a) நரி குரைக்க, ஆந்தை பேசியது
b) நரி சுத்த, ஆந்தை பேசியது
c) நரி ஊளையிட , ஆந்தை அவறியது
d) நரி உறும, ஆந்தை பேசியது
9) மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
a) மயில் அகவும் நரி ஊளையிடும்
b) ஆந்தை அலறும் கூகை கத்தும்
c) பசு குட்டிப் போட்டாது
d) கரையான் கூட்டில் எலி குட்டிப் போட்டாக
10) சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க
a) விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது
b) விடையை தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
c) விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது
d) விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது