1) மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
a) அகரு
b) அலர்
c) முகை
d) வீ
2) “திருவாரூர் நான்மணிமாலை” என்னும் நூலில் இடம்பெறாத பாவகை
a) வெண்பா
b) ஆசிரியப்பா
c) கட்டளைக் கலித்துறை
d) வஞ்சிப்பா
3) பொருந்தாததைச் சுட்டுக :
a) வாதம்
b) ஏமம்
c) பித்தம்
d) சீதம்
4) ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்க
a) பாந்தள்
b) முழை
c) உரகம்
d) பன்னகம்
5) கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக
a) பெளவம்
b) புணை
c) புணரி
d) பரவை
6) பின்வரும் நூல்களுள் மாறுபட்டதை தேர்க :
a) ஏலாதி
b) பழமொழி
c) சிறுபஞ்சமூலம்
d) திரிகடுகம்
7) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
a) மேதி
b) எண்கு
c) கேழல்
d) மஞ்ஞை
8) இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக :
a) வங்கம்
b) திமில்
c) பெளவம்
d) கலம்
9) உவம உருபு இல்லாத தொடர் எது?
a) கொக்கொக்க கூம்பும் பருவத்து
b) வளவரை வல்லைக் கெடும்
c) வேய்புரை தோள்
d) முழவு உறழ் தடக்கை
10) பின்வரும் இலக்கணக் குறிப்புகளுள் இனத்தில் சேராத ஒன்றைக் குறிப்பிடுக
a) அரங்கம்
b) மஞ்சு
c) சங்கு
d) வாழ்க்கை