பிழைத்திருத்தம்‌ – சந்திப்பிழையை நீக்குதல்‌, ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்‌, மரபுப்‌ பிழைகள்‌, வழூஉச் சொற்களை நீக்குதல்‌, பிறமொழிச்‌ சொற்களை நீக்குதல்

1) பின்வருவனவற்றுள்‌ பிழையற்ற வாக்கியத்தை தேர்வு செய்க :

a) ஆநிரை கள்வராலோ அல்லது பகைவராலோ கவரப்படின்‌ அது தூய்மைக்‌ குலைச்சலாகவோ பேரிழப்பாகவோ கருதப்பட்டது
b) ஆநிரை கள்வரால்‌ அல்லது பகைவரால்‌ கவரப்படின்‌ அது தூய்மைக்‌ குலைச்சலாகவோ அல்லது பேரிழப்பாகவோ கருதப்பட்டது
c) ஆநிரை கள்வராலோ அல்லது பகைவராலோ கவரப்படின்‌ அது தூய்மைக்‌ குலைச்சலாக அல்லது பேரிழப்பாகக்‌ கருதப்பட்டது
d) ஆநிரை கள்வரால்‌ அல்லது பகைவரால்‌ கவரப்படின்‌ அது தூய்மைக்‌ குலைச்சலாகவோ பேரிழப்பாகக்‌ கருதப்பட்டது

2) வழூஉச்‌ சொல்லற்ற தொடர்‌ எது?

a) வலது பக்கச்‌ சுவரில்‌ எழுதாதே
b) வலப்பக்கச்‌ சுவரில்‌ எழுதாதே
c) வலப்பக்கச் சுவற்றில்‌ எழுதாதே
d) வலது பக்கச்‌ சுவற்றில்‌ எழுதாதே

3) கீழ்வருவனவற்றுள்‌ பிழையில்லாச்‌ சொற்றொடர்‌ எது?

a) அவளது தந்தையும்‌ எனது மகனும்‌ கூறுவது ஏற்கத்தக்கது அல்ல
b) அவள்‌ தந்தையும்‌ என்‌ மகனும்‌ கூறுவன ஏற்கத்தக்கன அல்ல
c) அவளின்‌ தந்தையும்‌ என்‌ மகனும்‌ கூறுவன ஏற்கத்தக்கது அன்று
d) அவள்‌ தந்தையும்‌ எனது மகனும்‌ கூறுவது ஏற்கத்தக்கது அன்று

4) பொருளோடு பொருத்தமான வினையை இணைக்க :
A) கூரை – 1) வனைந்தான்‌
B) ஓலை – 2) கொய்தான்‌
C) பானை – 3) முடைந்தான்‌
D) தேங்காய்‌ – 4) வேய்ந்தான்‌

a) A-4, B-3, C-1, D-2
b) A-4, B-3, C-2, D-1
c) A-3, B-4, C-1, D-2
d) A-3, B-4, C-2, D-1

5) வழுவற்ற வாக்கியம்‌ எது?

a) மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாட்டைப்‌ புலி துரத்தின
b) மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாடுகளைப்‌ புலித்‌ துரத்தின
c) மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாடுகளைப்‌ புலி துரத்தியது
d) மந்தையாக மேய்ந்து கொண்டிருந்த மாட்டைப்‌ புலி துரத்தியது

6) சந்திப்பிழை இல்லாத தொடரைத்‌ தேர்க :

a) சங்க காலத்தில்‌ இசைத்‌ தமிழ்‌ சீரும்‌ சிறப்பு முற்றுத் திகழ்ந்தது
b) சங்கக்‌ காலத்தில்‌ இசைத்தமிழ்‌ சீரும்‌ சிறப்பு முற்றுத் திகழ்ந்தது
c) சங்க காலத்தில்‌ இசை தமிழ்‌ சீரும்‌ சிறப்பு முற்றுத் திகழ்ந்தது
d) சங்க காலத்தில்‌ இசைத்தமிழ்‌ சீரும்‌ சிறப்புமுற்ற திகழ்ந்தது

7) வழூஉச்‌ சொற்களற்ற வாக்கியத்தைத்‌ தேர்வு செய்க :

a) வெண்ணீர்‌ தாவாரத்தில்‌ ஓடியது
b) வெந்நீர்‌ தாவாரத்தில்‌ ஓடியது
c) வெந்நீர்‌ தாழ்வாரத்தில்‌ ஓடியது
d) வெண்ணீர்‌ தாழ்வாரத்தில்‌ ஓடியது

8) வழூஉச்‌ சொற்களற்ற வாக்கியத்தைத்‌ தேர்வு செய்க

a) ஒருத்தி புட்டு வித்து சிலவு செய்தாள்‌
b) ஒருத்தி புட்டு விற்று செலவு செய்தாள்‌
c) ஒருத்தி பிட்டு வித்து சிலவு செய்தாள்‌
d) ஒருத்தி பிட்டு விற்றுச்‌ செலவு செய்தாள்‌

9) பொருந்தா இணையைக்‌ கண்டறிக

a) நூல்‌ – வரை
b) தூள்‌ – வணங்‌கு
c) களை – பறி
d) நார்‌ – கிழி

10) கீழ்க்காண்பனவற்றுள்‌ எத்தொடர்‌ பிறமொழிச்‌ சொல் கலவாதது?

a) ஆசிரியர்‌ அனுமதி பற்று வேலன்‌ விடுப்பு எடுத்தான்‌
b) ஒப்பனை செய்து கொள்வதில்‌ பெருவிருப்புக்‌ கொண்டிருந்தாள்‌ எழிலி
c) அவர்‌ உடற்கூறு மருத்துவத்தில்‌ மிகச்சிறந்த நிபுணர்‌
d) அந்த விஞ்ஞானியின்‌ கண்டுபிடிப்பு மிகவும்‌ புதுமையானது