ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்‌ (PYQ)

1) ‘சலவரைச்‌ சாரா விடுதல்‌ இனிதே’
‘சலவர்‌’ – என்ற சொல்லின்‌ ஆங்கிலச்சொல்‌

a) Sorrow full person
b) Importer
c) Violent person
d) Deceitful person

2) Whit – என்ற ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லைத் தேர்ந்தெடுக்க

a) வெண்மையான
b) மாசற்ற
c) சுத்தமான
d) மிகச்சிறிய அளவு

3) பொருத்துக
A) SHELL AC – 1) கிளிஞ்சல்‌ உயிரி
B) SHELL FISH – 2) அரக்கு
C) SHELVE – 3) மேல்‌ ஓடு
D) SHELL – 4) தள்ளிப்போடு

a) A-2, B-1, C-4, D-3
b) A-4, B-3, C-2, D-1
c) A-3, B-4, C-1, D-2
d) A-2, B-4, C-1, D-3

4) Forfend – என்ற ஆங்கிலச்‌ சொல்லுக்கு கீழ்க்காணும்‌ விடைகளில் எது தவறானது?

a) தவிர்‌
b) விலக்கு
c) ஒன்றுசேர்‌
d) வேறுபக்கமாகத்‌ திரும்பு

5) பொருத்தம்‌ இல்லாச் சொல்லைத் தேர்வு செய்‌

a) Cajole – மருட்டி இசைவி
b) Cajolement – மருட்டி வசப்படுத்துதல்‌
c) Caitiff – இணங்கச்‌ செய்‌
d) Cajolery – பசப்புதல்

6) பொருந்தா இணையைக்‌ கண்டறிக

a) PERCHANGE – அநேகமாக
b) PERFORATOR – துளையிடுபவர்‌
c) PERFORM – துளை
d) PERFECT – முழுநிறைவு

7) வாயில்‌ ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம்‌ வினைப்பயன் – இப்பாடலடியில்‌ like எனும்‌ அங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்‌

a) பற்று
b) வேட்கை
c) நுகர்வு
d) தோற்றம்‌

8) “செறுநரைக்‌ காணின்‌ சுமக்க இறுவரை
காணின்‌ கிழக்காம் தலை”
இக்குறட்பாவில்‌ அடிக்கோடு இடப்பட்ட சொல்லுக்குச்‌ சரியான ஆங்கிலச்‌ சொல்லைத்‌ தேர்க

a) FOE
b) FOB
c) FOG
d) FOP

9) “SUCCESSION ACT” என்னும்‌ ஆங்கிலச்‌ சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்‌

a) வாரிசுரிமைச்‌ சட்டம்
b) உரிமைச்‌ சட்டம்‌
c) சொத்துரிமைச்‌ சட்டம்‌
d) மேற்கூறிய எதுவம்‌ இல்லை

10) “நாமார்க்கும்‌ குடியல்லோம்‌ நமனை அஞ்சோம்‌
நரகத்தில்‌ இடர்ப்படோம்‌ நடலை இல்லோம்‌”
இப்பாடலடிகளில்‌ இடம்பெற்றுள்ள ‘நடலை’க்கு இணையான ஆங்கிலச்‌ சொல்லை எழுதுக

a) Affection
b) Affiction
c) Attraction
d) Addition