ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் (PYQ)

1) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் இணை தருக [கலை – கழை]

a) கலைத்தல்‌ – மரம்‌
b) கவின்கலை – மூங்கில்‌
c) நீக்குதல்‌ – கழைக்கூத்து
d) ஒப்பனை – தழைத்தல்‌

2) மயங்கொலிப்‌ பிழையற்ற வாக்கியம்‌ எது?

a) பொருத்தருலுதல்‌ வேண்டும்‌ அரசே!
b) பொருத்தறுளுதல்‌ வேண்டும்‌ அறசே!
c) பொறுத்தருளுதல்‌ வேண்டும்‌ அரசே!
d) பொறுத்தறுழுதல்‌ வேண்டும்‌ அரசே!

3) பின்வரும்‌ இரண்டினுள்‌ பொருள்‌ பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு [கழை – களை]

a) கரும்பு – அழகு
b) மூங்கில்‌ – காந்தி
c) வேய்‌ – சீலை
d) கழி – அகற்று

4) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்‌ [சொல்‌ – பொருள்]
A) கழறல் – 1) வீரர்‌
B) களமா – 2) இடித்துரைத்தல்‌
C) கழனி – 3) களர் நிலம்‌
D) களரி – 4) வயல்‌

a) A-2, B-1, C-4, D-3
b) A-1, B-3, C-2, D-4
c) A-4, B-2, C-3, D-1
d) A-1, B-3, C-2, D-4

5) பொருத்துக [சொல் – பொருள்]
A) துரவு – 1) துறத்தல்
B) துறவு – 2) கிணறு
C) அரண்‌ – 3) சிவன்‌
D) அரன்‌ – 4) மதில்‌

a) A-2, B-1, C-4, D-3
b) A-1, B-3, C-2, D-4
c) A-4, B-2, C-3, D-1
d) A-1, B-3, C-2, D-4

6) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்‌

a) களை / முகவழகு, கழை / முங்கில்‌, கலை / ஒவியம்‌
b) களை / தலையழகு, கழை / தேக்கு, கலை / புத்தகம்‌
c) களை / பல்லழகு, கழை / கொன்றை, கலை / பள்ளி
d) களை / கையழகு, கழை / வாழை, கலை / களைதல்‌

7) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்‌

a) விலா – மரம்‌, விளா – எலும்பு
b) விலா – எலும்பு, விளா – விளங்கு
c) விலா – வலிமை, விளா – காய்‌
d) விலா – எலும்பு, விளா – மரம்‌

8) ஒலிவேறுபாடு அறிந்து இணைக்க
A) அரை – 1) யாசித்தல்‌
B) அறை – 2) பாதி
C) இரத்தல்‌ – 3) வீட்டின்‌ பகுதி
D) இறத்தல்‌ – 4) சாதல்‌

a) A-2, B-3, C-2, D-4
b) A-2, B-3, C-1, D-4
c) A-4, B-2, C-3, D-1
d) A-3, B-1, C-2, D-4

9) பொருத்துக
A) உளை – 1) மான்‌
B) உழை – 2) சேறு
C) களி – 3) கோல்‌
D) கழி – 4) மகிழ்ச்சி

a) A-1, B-3, C-4, D-2
b) A-2, B-1, C-4, D-3
c) A-1, B-4, C-2, D-3
d) A-3, B-2, C-1, D-4

10) ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை யறிதல்‌

a) குளவி, அம்மிக்கல்‌, குழவி / ஆட்டுக்கல்‌
b) குளவி / வண்டு, குழவி / குழந்தை
c) குளவி / குழந்தை, குழவி / வண்டு
d) குளவி / ஆட்டுக்கல்‌, குழவி / அம்மிக்கல்‌