அறநூல்கள் தொடர்பான செய்திகள்‌ (PYQ)

1) “எறும்பும்‌ தன்கையில்‌ எண்‌ சாண்‌” – எனப்‌ பாடியவர்‌

a) கபிலர்‌
b) ஒட்டக்கூத்தர்‌
c) ஒளவையார்‌
d) புகழேந்தி

2) மேதையில்‌ சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது

a) கற்றது மறவாமை
b) ஒழுக்கம்‌ உடைமை
c) கண்ணகஞ்சப் படுதல்‌
d) வாய்மை உடைமை

3) தமிழகத்தில்‌ கழுமலம்‌ என்ற ஊரில்‌ நிகழ்ந்த போர்‌ வரலாற்றைக்‌ கூறும்‌ நூல்‌ எது?

a) முத்தொள்ளாயிரம்‌
b) புறநானூறு
c) களவழி நாற்பது
d) பதிற்றுப்பத்து

4) “ஓதலிற்‌ சிறந்தன்று ஒழுக்கமுடைமை” என்று கூறும்‌ நூல்‌

a) திருக்குறள்
b) சிறுபஞ்சமூலம்
c) முதுமொழிக்காஞ்சி
d) ஆசாரக்கோலை

5) “ ————
கருமமே கண்ணாயினார்‌” – என்ற அடியை ஈற்றடியாகக்‌ கொண்ட நீதி நூலின்‌ பெயர்‌

a) நாலடியார்‌
b) மூதுரை
c) நீதிநெறி விளக்கம்‌
d) ஆசாரக்கோவை

6) கீழுள்ள நூல்‌ பட்டியலில்‌ மாறியிருக்கும்‌ நூல்‌ எது?

a) ஏலாதி
b) திருமந்திரம்‌
c) திருவாசகம்‌
d) திருத்தொண்டத்தொகை

7) ‘சலவரைச்‌ சாரா விடுதல்‌ இனிதே’
சலவர்‌ – யாரைக்‌ குறிக்கிறது?

a) திருடர்‌
b) வஞ்சகர்‌
c) பொய்யர்‌
d) செல்வர்‌

8) பட்டியல்‌ Iல்‌ உள்ள சொற்றொடரைப்‌ பட்டியல்‌ IIல்‌ உள்ள சொற்றொடருடன்‌ பொருத்தி குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு
A) களவழி நாற்பது – 1) நிலையாமை
B) முதுமொழிக்காஞ்சி – 2) வேளாண்‌ வேதம்‌
C) நாலடியார்‌ – 3) ஆறுமருந்து
D) ஏலாதி – 4) புறப்பொருள்‌

a) A-3, B-1, C-2, D-4
b) A-2, B-3, C-4, D-1
c) A-1, B-3, C-4, D-2
d) A-4, B-1, C-2, D-3

9) பட்டியல்‌ Iல்‌ உள்ள சொற்றொடரைப்‌ பட்டியல்‌ IIல்‌ உள்ள தொடர்களுடன்‌ பொருத்திக்‌ குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்‌
A) கண் வனப்பு – 1) செல்லாமை
B) எண்‌ வனப்பு – 2) இத்துணையாம்‌
C) பண் வனப்பு – 3) கண்ணோட்டம்
D) கால் வனப்பு – 4) கேட்டார்‌ நன்றென்றல்‌

a) A-3, B-2, C-4, D-1
b) A-3, B-1, C-2, D-4
c) A-1, B-2, C-4, D-3
d) A-2, B-3, C-4, D-1

10) பொருத்துக
A) களவழி நாற்பது – 1) பெருவாயின்‌ முள்ளியார்‌
B) கைந்நிலை – 2) புல்லங்காடனார்‌
C) முதுமொழிக்காஞ்சி – 3) பொய்கையார்‌
D) ஆசாரக்கோவை – 4) கூடலூர்‌ கிழார்‌

a) A-1, B-3, C-2, D-4
b) A-4, B-1, C-2, D-3
c) A-3, B-2, C-4, D-1
d) A-2, B-4, C-1, D-3