1) சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
a) பேராசிரியர்
b) அடியார்க்கு நல்லார்
c) நச்சினார்க்கினியர்
d) ந.மு.வேங்கடசாமி
2) ‘கோவலன் பொட்டல்’ என வழங்கப்படும் இடம்
a) கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
b) கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
c) கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
d) கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
3) குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
a) சூளாமணி
b) நாககுமார காவியம்
c) யசோதர காவியம்
d) நீலகேசி
4) சீவகசிந்தாமணியின் உட்பிறிவுக்கு என்ன பெயர்?
a) காதை
b) இயல்
c) இலம்பகம்
d) காண்டம்
5) மணிமேகலையின் தோழி
a) காய சண்டிகை
b) நீலி
c) ஐயை
d) சுதமதி
6) “சீர்திருத்தக் கருத்துக்களின் செல்வக்களஞ்சியம்” – என்று புகழப்படுவது
a) சிலப்பதிகாரம்
b) சீவகசிந்தாமணி
c) வளையாபதி
d) மணிமேகலை
7) “நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
a) கம்பர்
b) கபிலர்
c) இளங்கோவடிகள்
d) சீத்தலைச் சாத்தனார்
8) ஐஞ்சிறுங்காப்பியம் – இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி
a) உதயண குமார காவியம்
b) இராவண காவியம்
c) நாக குமார காவியம்
d) யசோதா காவியம்
9) பொருத்துக:
A) சிலப்பதிகாரம் – 1) சீர்திருத்தக் காப்பியம்
B) மணிமேகலை – 2) சொற்போர் காப்பியம்
C) சீவகசிந்தாமணி – 3) குடிமக்கள் காப்பியம்
D) குண்டலகேசி – 4) வருணனைக் காப்பியம்
a) A-3, B-1, C-4, D-2
b) A-3, B-2, C-4, D-1
c) A-2, B-1, C-3, D-4
d) A-4, B-3, C-1, D-2
10) பொருத்துக (யாருடைய கூற்று)
A) தேரா மன்னா செப்புவது உடையேன் – 1) மணிமேகலை
B) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் – 2) கோவலன்
C) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக – 3) கண்ணகி
D) சீறடிச் சிலம்பு கொண்டு போய் மாறிவருவன் – 4) ஆதிரை
a) A-3, B-4, C-1, D-2
b) A-3, B-4, C-2, D-1
c) A-4, B-3, C-2, D-1
d) A-1, B-2, C-3, D-4