உ.வே.சாமிநாதர்‌, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்‌, சி.இலக்குவனார்‌ – தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்‌ (PYQ)

1) ‘DRAVIDIAN FEDERATION’ என்னும்‌ ஆங்கில இதழை நடத்திய தமிழறிஞர்‌

a) சி. இலக்குவனார்‌
b) ஜே.எம்‌. நல்லாசாமிப்பிள்ளை
c) மறைமலையடிகள்‌
d) திரு.வி. கல்யாணசுந்தரனார்‌

2) மடங்களிலே மறைந்து கிடந்த தமிழை மக்கள்‌ மடியிலே தவழச் செய்தவர்

a) மறைமலையடிகள்‌
b) குன்றக்குடி அடிகளார்‌
c) உ.வே.சாமிநாத ஐயர்‌
d) பரிதிமாற்‌ கலைஞர்‌

3) தன்‌ வாழ்க்கை வரலாற்றை ‘என்‌ சரிதம்‌’ என்னும்‌ பெயரில்‌ ஆனந்த விகடன்‌ இதழில்‌ தொடராக எழுதியவர்‌ யார்‌?

a) உ.வே.சாமிநாத ஐயர்‌
b) மறைமலை அடிகள்‌
c) காந்தியடிகள்‌
d) நேரு

4) மிகவேகமாகச்‌ செய்யுள்‌ நூல்‌ எழுதுவதில்‌ வல்லவர்‌; தமிழில்‌ மிகப்பல செய்யுள்‌ நூல்களை எழுதியவர்‌

a) மீனாட்சி சுந்தரம்‌ பிள்ளை
b) பலபட்டடைச்‌ சொக்கநாதர்‌
c) தஞ்சை வேதநாயகம்‌
d) இராமலிங்கர்‌

5) உ.வே.சாமிநாத ஐயரின்‌ ஆசிரியர்‌ பெயர்‌

a) ரா.பி. சேதுப்பிள்ளை
b) கடிகை முத்துப்புலவர்‌
c) சி. இலக்குவனார்‌
d) மகாவித்துவான்‌ மீனாட்சி சுந்தரனார்‌

6) மகாவித்துவான்‌ மீனாட்சி சுந்தரனார்‌ பிறந்த ஆண்டு

a) 1715
b) 1755
c) 1785
d) 1815

7) உ.வே.சாவின்‌ தமிழ்ப்பணியைப்‌ பாராட்டிய மேலைநாட்டவர்‌

a) கோலரிட்ஜ்‌
b) வோர்ட்ஸ்‌ வொர்த்‌
c) கீட்ஸ்‌
d) சூலியல்‌ வின்சோன்‌

8) ‘சாமிநாதன்‌’ என்று ஆசிரியரால்‌ பெயரிடப்பட்டவர்‌

a) அம்பேத்கர்‌
b) காமராசர்‌
c) உ.வே.சா
d) அண்ணா

9) உ.வே.சாவின்‌ வாழ்க்கை வரலாறு தொடராக வந்த இதழ்‌

a) இந்தியா
b) குயில்‌
c) ஆனந்தவிகடன்‌
d) நவசக்தி

10) ஆனந்த விகடன்‌ இதழில்‌ தம்‌ வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்‌

a) உ.வே. சாமிநாதன்‌
b) ம.பொ. சிவஞானம்‌
c) திரு.வி. கல்யாண சுந்தரனார்‌
d) தாரா.பாரதி