1) சரியான விடையைத் தேர்க
தற்காலத்தில் மதுரை என அழைக்கப்படும் ஊர் பழங்காலக் கல்வெட்டுகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
a) மதுர
b) மதுரா
c) மதிரை
d) மதுரை
2) பொருத்துக : [ஊர் – சிறப்புப் பெயர்]
A) மதுரை – 1) திருவடிசூலம்
B) திருநெல்வேலி – 2) கடம்பவனம்
C) சிதம்பரம் – 3) வேணுவனம்
D) திருவிடைச்சுரம் – 4) தில்லைவனம்
a) A-1, B-3, C-2, D-4
b) A-2, B-3, C-1, D-4
c) A-2, B-3, C-4, D-1
a) A-4, B-2, C-3, D-1
3) “தென்னிந்தியாவின் ஏதென்ஸ்” என்னும் புகழ் மிக்க நகரம்
a) மதுரை
b) ஊட்டி
c) கொடைக்கானல்
d) ஏற்காடு
4) கிருஷ்ணகிரி, கோத்தகிரி – இதில் காணப்படும் ‘கிரி’ எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
a) கல்லிடைக்குறிச்சி
b) பாறை
c) மலை
d) கோட்டை
5) தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I) ஒருவர் ஒரு இடம் பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II) தமிழில் பெயர்ச்சொற்கள் ஒரு போதும் காலம் காட்டி வருவதில்லை
II)) தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV) குழந்தை என்னும் தமிழ்ப் பெயர்பால் பகாப்பெயர்ச்சொல் ஆகும்
a) IV, III, I சரியானவை
b) II, III, IV சரியானவை
c) I, II, IV சரியானவை
d) III, I, II சரியானவை
6) தமிழகத்தை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து ஆண்டவர்கள்
a) பாண்டியர்கள்
b) நாயக்கர்கள்
c) சேரர்கள்
d) சோழர்கள்
7) சரியான விடையைத் தேர்ந்தெடு
கீழ் உள்ளவற்றுள் தமிழ் நாட்டில் பறவைகள் புகலிடங்களுள் ஒன்று
a) திருநின்றவூர்
b) கரூர்
c) வடுவூர்
d) பேரூர்
8) நானிலத்திற்குரிய ஊரின் பெயர்களைப் பொருத்துக
A) குறிஞ்சி – 1) ஆலங்காடு
B) முல்லை – 2) கோடியக்கரை
C) மருதம் – 3) ஆனைமலை
D) நெய்தல் – 4) புளியஞ்சோலை
a) A-3, B-1, C-4, D-2
b) A-2, B-1, C-3, D-4
c) A-3, B-2, C-1, D-4
a) A-1, B-3, C-4, D-2
9) நெய்தல் நிலத்துக்குப் பொருத்தமான ஊர்ப் பெயர்களைத் தேர்ந்தெடுக்க
a) கோவில்பட்டி, காளிப்பட்டி
b) சிப்பிப்பாறை, மொடக் குறிச்சி
c) ஆத்தூர், தெங்கூர்
d) கீழக்கரை, பட்டினப்பாக்கம்
10) பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ———— எனப்படும்
a) நகரம்
b) பட்டினம்
c) பாக்கம்
d) பட்டி