1) சரியான விடையைக் கண்டறி :
தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தியடிகள் இந்தியன் ஒப்பீனியன் இதழில் கூறியுள்ளது
a) வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்
b) வள்ளியம்மையே சிறைத்தண்டனைக்கு வருந்த வில்லை
c) வள்ளியம்மை உடல் நலிவுற்றுள்ளார்
d) நம்பிக்கை தான் வள்ளியம்மையின் ஆயுதம்
2) பொருந்தாக் கூற்றைத் தேர்க :
இராணி மங்கம்மாள் தன் ஆட்சிக்காலத்தில் தன் படைத்தளபதி நரசப்பையன் தலைமையில்
a) திருவிதாங்கூர்ப் போரில் வெற்றி பெற்றார்
b) தஞ்சை மன்னரால் கைப்பற்றப்பட்ட பகுதியை மீட்டெடுத்தார்
c) மைசூர் மீது படையெடுக்க தஞ்சை – மதுரை கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார்
d) முகலாயரோடு போரிட்டு வெற்றி பெற்றார்
3) ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி
a) இராணி மங்கம்மாள்
b) வேலு நாச்சியார்
c) இராணி பத்மினி
d) இராணி லஷ்மிபாய்
4) கோடிட்ட இடத்தை நிரப்புக:
தில்லையாடி வள்ளியம்மை ———— நாட்டில் பிறந்தார்
a) அமெரிக்கா
b) இத்தாலி
c) இந்தியா
d) தென்னாப்பிரிக்கா
5) கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர்
a) தில்லையாடி வள்ளியம்மை
b) வேலுநாச்சியார்
c) இராணி மங்கம்மாள்
d) ஜான்சி ராணி
6) இராமாமிர்த அம்மையார் எப்பெயரால் அழைக்கப் பெறுகிறார்?
a) சமாதான புறா
b) தேசத் தாய்
c) சமூக நலத்தாய்
d) தமிழகத்தின் அன்னி பெசன்ட் அம்மையார்
7) சரியான விடையைக் கண்டுபிடி
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்
a) கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
b) முனுசாமி, மங்களம்
c) வெங்கட்ராமன், அம்மணி
d) நீலமேகம்பிள்ளை, செளந்தரவல்லி அம்மையார்
8) “நம்பிக்கைதான் வள்ளியம்மையின் ஆயுதம்” என்றவர்
a) பெரியார்
b) அறிஞர் அண்ணா
c) அண்ணல் அம்பேத்கர்
d) காந்தியடிகள்
9) “ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம்” என்றவர் யார்?
a) அன்னிபெசண்ட் அம்மையார்
b) மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்
c) தில்லையாடி வள்ளியம்மை
d) இராணி மங்கம்மாள்
10) மங்கம்மாள் அன்னச்சத்திரம் கட்டிய இடம் எது?
a) சென்னை
b) மதுரை
c) கோவை
d) தஞ்சை