மரபுக்கவிதை – முடியரசன்‌, வாணிதாசன்‌, சுரதா, கண்ணதாசன்‌, உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌, மருதகாசி தொடர்பான செய்திகள்‌, அடைமொழிப் பெயர்கள்‌ (PYQ)

1) “ஆட்சிக்கும்‌ அஞ்சாமல்‌ யாவரேனும்‌
ஆள்கவெனத் துஞ்சாமல்‌, தனது நாட்டின்‌
மீட்சிக்குப்‌ பாடுபவன்‌ கவிஞன்‌ ஆவான்‌” – என்று பாடியவர்‌ யார்‌?

a) பாரதிதாசன்‌
b) கண்ணதாசன்‌
c) முடியரசன்‌
d) பாரதியார்‌

2) “சேமமுற நாள்‌ முழுவதும்‌ உழைப்பதனாலே” – இந்தத்‌ தேசமெல்லாம்‌ செழுந்திடுது – எனப்‌ பாடியவர்‌

a) கண்ணதாசன்‌
b) தஞ்சை இராமையாதாஸ்‌
c) மருதகாசி
d) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்‌

3) கீழ்வருவனவற்றுள்‌ கவிஞனர் கண்ணதாசன்‌ இயற்றாத நூல்‌ எது?

a) ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
b) இராஜதண்டனை
c) மாங்கனி
d) கொய்யாக்கனி

4) உவமைக்‌ கவிஞர்‌ சுரதா இயற்றிய நூல்‌ எது?

a) நிலவுப் பூ
b) சூரியகாந்தி
c) தேன்மழை
d) பூங்கொடி

5) தமிழகத்தின்‌ ‘வேர்ட்ஸ்‌ வொர்த்‌’ எனப்‌ புகழப்படும்‌ கவிஞர்‌ யார்‌?

a) பாரதிதாசன்‌
b) கண்ணதாசன்‌
c) சுப்புரத்தினதாசன்‌
d) வாணிதாசன்‌

6) “கல்விக்கோர்‌ கம்பன்‌ போலும்‌
கவிதைக்கோர்‌ பரணர்‌ போலும்‌” – என்று பாடியவர்‌

a) கண்ணதாசன்‌
b) நாமக்கல்‌ இராமலிங்கனார்‌
c) சுரதா
d) பாரதியார்‌

7) பட்டுக்‌ கோட்டை கல்யாண சுந்தரனார்‌ எவ்வாறு புகழப்‌படுகிறார்?

a) தேசியக்‌ கவிஞர்‌
b) மக்கள்‌ கவிஞர்‌
c) வித்தகக்‌ கவிஞர்‌
d) புரட்சிக்‌ கவிஞர்‌

8) கவிஞர்‌ அவர்தம்‌ இயற்பெயரும் பொருந்துகிற சரியான விடையைத்‌ தேர்ந்‌தெடு : [கவிஞர்‌ – இயற்பெயர்‌]
A) கண்ணதாசன்‌ – 1) ராசகோபாலன்‌
B) வாணிதாசன்‌ – 2) சுப்புரத்தினம்‌
C) சுரதா – 3) எத்திராசலு
D) பாரதிதாசன்‌ – 4) முத்தையா

a) A-4, B-3, C-1, D-2
b) A-1, B-2, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-1, C-4, D-3

9) “பகுத்தறிவு கவிராயர்‌” என அழைக்கப்படுபவர்‌ யார்‌?

a) இராமச்சந்திர கவிராயர்‌
b) சுவிக்காளமேகம்‌
c) உடுமலை நாராயணக்கவி
d) திரிகூடராசப்ப கவிராயர்‌

10) கீழ்க்கண்டவற்றுள்‌ சரியானது எது?

a) வாணிதாசன்‌ – கொடிமுல்லை
b) கண்ணதாசன்‌ – எழிலோவியம்‌
c) சுத்தானந்த பாரதியார்‌ – தைப்பாவை
d) முடியரசன்‌ – பாரதசக்தி மகாகாவியம்‌