1) திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
a) யான் கண்ட இலங்கை
b) எனது இலங்கைச் செலவு
c) யான் கண்ட ஜப்பான்
d) உலகம் சுற்றிய தமிழன்
2) வள்ளலார் பதிப்பித்த நூல் எது?
a) திருச்சதகம்
b) அறப்பளீசுர சதகம்
c) தொண்டமண்டல சதகம்
d) குமரேச சதகம்
3) பொருத்துக : [நூல்கள் – இயற்றியவர்]
A) பொதுமை வேட்டல் – 1) இராமலிங்க அடிகளார்
B) சீவகாருண்ய ஒழுக்கம் – 2) தாயுமானவர்
C) தொன்னூல் விளக்கம் – 3) திரு.வி.க.
D) ஆனந்த களிப்பு – 4) வீரமாமுனிவர்
a) A-3, B-1, C-4, D-2
b) A-2, B-4, C-3, D-1
c) A-1, B-3, C-3, D-4
d) A-4, B-2, C-1, D-3
4) திரு.வி.க. இயற்றிய ‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ————
a) நானூற்று முப்பது
b) இருநூற்று ஒன்று
c) முந்நூற்று ஆறு
d) நானூற்று எழுபது
5) பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை
a) நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்
b) வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
c) பெண்களே சமூகத்தின் கண்கள்
d) சமத்துவத்தன் மறுபெயரே மனிதநேயம்
6) ‘அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத்தொண்டு’ எனக் கூறியவர் யார்?
a) இராமலிங்க அடிகள்
b) தாயுமானவர்
c) ஆறுமுக நாவலர்
d) குமரகுருபரர்
7) ‘கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ – எனப் பாடியவர்
a) வள்ளலார்
b) பாரதியார்
c) பெருந்தேவனார்
d) பாரதிதாசனார்
8) திரு.வி.க பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ———— என்று அழைக்கப்படுகிறது
a) பல்லவபுரம்
b) இலட்சுமி புரம்
c) தண்டலம்
d) இராமவரம்
9) “புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றப்பட்டவர்
a) இராமலிங்க அடிகளார்
b) தாயுமானவர்
c) திரு.வி.க.
d) கவிமணி
10) புரட்சித் துறவி என அழைக்கப்படுபவர்
a) இளங்கோவடிகள்
b) மணிமேகலை
c) விவேகானந்தர்
d) இராமலிங்கம்