1) “ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன” – இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
a) அறிஞர் அண்ணா
b) வல்லிக்கண்ணன்
c) பட்டுக்கோட்டையார்
d) மீரா
2) எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
a) மீரா
b) இன்குலாப்
c) தருமு சிவராமு
d) ந. பிச்சமூர்த்தி
3) மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் “ஈஸ்வரலீலை’ என்னும் கதைநூலின் ஆசிரியர்
a) லாச. ராமாமிருதம்
b) சி.சு. செல்லப்பா
c) ந. பிச்சமூர்த்தி
d) தி. ஜானகிராமன்
4) புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியின் முதல் புதுக்கவிதை
a) பெட்டிக்கடை நாராயணன்
b) கிளிக்கூண்டு
c) காதல்
d) ஒளியின் அழைப்பு
5) சிறந்த படிமக் கவிஞர் எனப் பாராட்டப்படுபவர்
a) மயன்
b) தேவதேவன்
c) பிரமிள்
d) எஸ்.வைத்தீஸ்வரன்
6) இவர்களுள் ஒருவர் இலங்கையில் பிறந்த தமிழ்க் கவிஞர்
a) தருமு சிவராமு
b) சி. மணி
c) பசுவய்யா
d) தேவதேவன்
7) கவிஞர் தாராபாரதி எழுதாத கவிதை நூல் இது
a) புதிய விடியல்கள்
b) இது எங்கள் கிழக்கு
c) சொந்தச் சிறைகள்
d) இன்னொரு சிகரம்
8) கவிதை நூலாசிரியர்களோடு நூல்களைப் பொருத்துக : [நூல் – நூலாசிரியர்]
A) கண்ணீர்ப் பூக்கள் – 1) அப்துல் ரகுமான்
B) இன்னொரு தேசியகீதம் – 2) மீரா
C) ஊசிகள் – 3) வைரமுத்து
D) பால்வீதி – 4) மு. மேத்தா
a) A-4, B-3, C-2, D-1
b) A-1, B-3, C-2, D-4
c) A-3, B-1, C-4, D-2
d) A-2, B-4, C-1, D-3
9) ‘புரட்சி முழக்கம்’ – என்ற நூலை எழுதியவர் யார்?
a) ஞான கூத்தன்
b) சாலை இளந்திரையன்
c) சாலினி இளந்திரையன்
d) சி.சு. செல்லப்பா
10) ந. பிச்சமூர்த்தி என்ற கவிஞரின் இயற்பெயர் என்ன?
a) கனகசபை
b) வேங்கட மகாலிங்கம்
c) இராச கோபால்
d) அரங்கசாமி