1) நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை
a) ஓவியக்கலை
b) இசைக்கலை
c) பேச்சுக்கலை
d) சிற்பக்கலை
2) சிலையின் முன்புறம் மட்டும் தெரியுமாறு சுவர்களில் வடிப்பது
a) உண்மைச் சிற்பம்
b) முழுச் சிற்பம்
c) புடைப்புச் சிற்யம்
d) எதுவும் இல்லை
3) பட்டியல் I-ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
A) உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளை படமாக்குவது – 1) வால்ட் டிஸ்னி
B) ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக் கொள்வது – 2) கல்விப்படம்
C) கற்பதற்கென உருவாக்கப்படும் படம் – 3) விளக்கப்படம்
D) கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் – 4) செய்திப்படம்
a) A-4, B-2, C-1, D-3
b) A-2, B-1, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-3, B-1, C-2, D-4
4) தமிழிசைக்கருவி ‘யாழ்’ பற்றி பலகாலம் ஆராய்ந்து யாழ் நூல் இயற்றியவர்
a) சண்முகானந்தர்
b) விபுலானந்தர்
c) தேஜானந்தர்
d) கஜானந்தர்
5) ‘புனையா ஒவியம்’ என்பதன் பொருள்
a) வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
b) பூக்களால் வரைவது
c) மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
d) கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது
6) கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக
a) ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்பெற்றது
b) ஓவியர், கண்ணுள் விளைஞர் எனப் புகழப்பெற்றார்
c) ஓவியருக்கு நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர் என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்
d) ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி, திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது
7) பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?
a) தேசிகப்பாவை
b) மர வட்டிகை
c) புனையா ஓவியம்
d) கண்ணுள் வினைஞர்
8) ஜராவதீசுவரர் கோயிலைக் கட்டிய அரசன்
a) இரண்டாம் இராசராசன்
b) இராசேந்திரன்
c) குலோத்துங்கன்
d) கிள்ளி வளவன்
9) “கண்ணுள் வினைஞர்” என மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால் பாராட்டப் பெறுபவர்கள்
a) ஓவியக் கலைஞர்கள்
b) சிற்பக் கலைஞர்கள்
c) கட்டடக் கலைஞர்கள்
d) இசைக் கலைஞர்கள்
10) தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களுள் மிகவும் பழமையான கோயில் உள்ள ஊர்
a) சுவாமி மலை
b) பிள்ளையார்பட்டி
c) திருப்பரங்குன்றம்
d) பழனி