பாரதியார்‌, பாரதிதாசன்‌, நாமக்கல்‌ கவிஞர்‌, கவிமணி தேசிக விநாயகனார்‌ தொடர்பான செய்திகள்‌, சிறந்த தொடர்கள்‌, சிறப்புப்‌ பெயர்கள்‌ (PYQ)

1) பாரதிக்கு ‘மகாகவி’ என்ற பட்டம்‌ கொடுத்தவர்‌ யார்‌?

a) வ.ரா
b) உ.வே.சா
c) கி.ஆ.பெ.வி.
d) லா.ச.ரா.

2) ‘ஷெல்லிதாசன்‌’ என்று தன்னைக்‌ கூறிக்‌ கொண்டவர்‌ யார்‌?

a) சுப்பிரமணிய பாரதியார்‌
b) சுத்தானந்த பாரதியார்‌
c) சோமசுந்தர பாரதியார்‌
d) சுப்ரமணிய சிவா

3) “திலகர்‌ விதைத்த விதை பாரதியாக முளைத்தது” – என்று கூறியவர்‌ யார்‌?

a) காந்திஜி
b) நேருஜி
c) இராஜாஜி
d) நேதாஜி

4) “ஆயுள்‌ நாள்‌ முழுவதும்‌ தமிழ்மகன்‌ தன்னுடன்‌ வைத்துக்‌ கொண்டு அனுபவிக்கக்கூடிய வாடாத கற்பகப்‌ பூச்செண்டு” என்று கவிமணியின்‌ பாடலைப்‌ பாராட்டியவர்‌ யார்‌?

a) வ.உ.சிதம்பரம்‌
b) டி.கே. சிதம்பரம்‌
c) சிதம்பர சுவாமி
d) சிதம்பர நாதன்‌

5) “மருமக்கள்‌ வழி மான்மியம்‌” என்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

a) திரு.வி.க.
b) கவிமணி
c) இரசிகமணி
d) நாமக்கல்‌ கவிஞர்‌

6) கீழ்க்காண்பவர்களுள்‌ ‘சீட்டுக்கவி’ எழுதியவர்‌

a) நாமக்கல்‌ கவிஞர்‌
b) சுப்பிரமணிய பாரதியார்‌
c) கவிமணி தேசிக விநாயகம்‌ பிள்ளை
d) உ.வே.சுவாமிநாத ஐயர்‌

7) ‘The light of Asia’ என்ற ஆங்கில நூலைத்‌ தமிழில்‌ மொழிபெயர்த்தவர்‌

a) கவிமணி தேசிக விநாயகம்‌ பிள்ளை
b) நாமக்கல்‌ கவிஞர்‌
c) உடுமலை நாராயண கவி
d) மருதகாசி

8) ‘தமிழுக்குத்‌ தொண்டு செய்வோர்‌ சாவதில்லை’ என முழங்கியவர்‌

a) பாரதியார்‌
b) கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
c) பாரதிதாசன்‌
d) நாமக்கல்‌ கவிஞர்‌

9) பொருத்துக :
A) உவமைக்‌ கவிஞர்‌ – 1) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்‌
B) காந்தியக்‌ கவிஞர்‌ – 2) சுரதா
C) புரட்சிக்‌ கவிஞர்‌ – 3) நாமக்கல்‌ கவிஞர்‌
D) மக்கள்‌ கவிஞர்‌ – 4) பாரதிதாசன்‌

a) A-2, B-1, C-4, D-3
b) A-2, B-3, C-4, D-1
c) A-4, B-2, C-3, D-1
d) A-3, B-4, C-1, D-2

10) பின்வரும்‌ பாடலின்‌ ஆசிரியரைப்‌ பொருத்துக
A) தமிழன்‌ என்றோர்‌ இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு – 1) கவிமணி
B) முப்பது கோடி முகமுடையாள்‌ உயிர்‌ மெய்ம்புற ஒன்றுடையாள்‌ – 2) நாமக்கல்‌ கவிஞர்‌
C) எங்‌கள்‌ பகைவர்‌ எங்கோ மறைந்தார்‌ இங்குள்ள தமிழர்கள்‌ ஒன்றாதல்‌ கண்டே – 3) பாரதியார்‌
D) மங்கையராய்ப்‌ பிறப்பதற்கே நல்ல மாதவம்‌ செய்திட வேண்டுமம்மா – 4) பாரதிதாசன்‌

a) A-1, B-4, C-2, D-3
b) A-3, B-1, C-2, D-4
c) A-2, B-3, C-4, D-1
d) A-4, B-2, C-3, D-1