சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு (PYQ)

1) சரியான வினாச்‌ சொல்‌ அமைந்த வாக்கியத்தைச் சுட்டுக.

a) கவிதையை எழுதியவர்‌ என்ன?
b) செல்வத்துப்‌ பயன்‌ எத்தனை?
c) தமிழகத்தின்‌ முதலமைச்சர்‌ யார்‌?
d) பொய்கையாழ்வார்‌ எவற்றை பிறந்தார்‌ ?

2) தொடரைப்‌ படித்து ஏற்ற வினாவைத் தேர்ந்தெடு
பூங்கொடி தன்‌ தோழியுடன்‌ திங்கட்கிழமை காலையில்‌ பேருந்தில்‌ ஏறிப்‌ பள்ளிக்குச்‌ சென்றாள்‌.

a) பூங்கொடி தன்‌ தோழியுடன்‌ ஏன்‌ சென்றாள்‌?
b) பூங்கொடி எந்தப்‌ பள்ளிக்குச்‌ சென்றாள்‌?
c) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச்‌ சென்றாள்‌?
d) பூங்கொடி யார்‌, யாருடன்‌ சென்றாள்‌?

3) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.

a) அறிவுநம்பி அமெரிக்கா சென்றார்‌
b) நேற்று புயல்‌ வீசியதால்‌ பள்ளிக்கு விடுமுறை
c) அந்தோ என்‌ செல்வம்‌ பறிபோயிற்றே
d) இது எப்படி நடந்தது

4) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு
மக்களின்‌ வாழ்க்கைத்‌ தரம்‌ உயர்வதில்‌ செயற்கைக்கோளின்‌ பங்கு ————?

a) யார்‌?
b) ஏன்‌?
c) யாது?
d) யாவை?

5) சரியான வினாச்‌சொல்லைத்‌ தேர்ந்தெடு
ஆழ்வார்கள்‌ ———— பேர்‌ ?

a) எத்துணை
b) எத்தனை
c) எப்போது
d) எப்பொழுது

6) சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு
“ஆத்திசூடியின்‌ ஆசிரியர்‌ ————?”

a) எப்படி
b) எது
c) ஏன்‌
d) யார்‌

7) சரியான வினாச்‌சொல்லைத்‌ தேர்ந்தெடுக்க.
திருக்குறளில்‌ உள்ள குறட்பாக்கள்‌ ————?

a) எவ்வளவு
b) எத்தனை
c) யாவை
d) எவை

8) சரியான வினாச்சொல்லைத்‌ தோந்தெடுக்க.
குற்றாலக்‌ குறவஞ்சியைப்‌ பாடியவர்‌ ————?

a) எவர்‌
b) எது
c) யார்‌
d) ஏன்‌

9) சரியான வினாச்சொல்லைத்‌ தேர்ந்தெடு.
நாயன்மார்கள்‌ ———— பேர்‌ ?

a) என்ன
b) எப்படி
c) எத்தனை
d) எவ்வாறு

10) சரியான வினாச்‌சொல்‌ அமைந்த தொடரைத்‌ தேர்க.

a) இனஎழுத்துகள்‌ என்றால்‌ எப்போது?
b) இனஎழுத்துகள்‌ என்றால்‌ யார்‌?
c) இனஎமுத்துகள்‌ என்றால்‌ ஏன்‌?
d) இனஎழுத்துகள்‌ என்றால்‌ என்ன?