அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க (PYQ)

1) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க (பெரிய)

a) எல்லோருக்கும்‌ ———— வணக்கம்‌.
b) அவன்‌ ———— நண்பனாக இருக்கிறான்‌.
c) ———— ஓவியமாக வரைந்து வா.
d) ———— விலங்கிடம்‌ பழகாதே.

2) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க: (நன்மை)

a) கல்வியே ஒருவருக்கு ———— தரும்‌
b) வாழ்க்கைப்‌ பயணம்‌ ———— பாடங்களை க்‌ கற்றுத்‌ தருகிறது
c) மரத்தை வளர்ப்பது ———— பயக்கும்‌
d) கவிதைக்கு ———— தரும்‌

3) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க (தலை)

a) உழந்தும்‌ உரலே ————
b) உழந்தும்‌ உலவே ————
c) உழந்தும்‌ உறவே ————
d) உழந்தும்‌ உழவே ————

4) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில் சேர்க்க (தொடுதல்‌)

a) காற்றின்‌ மெல்லிய ———— பூக்களைத்‌ தலையாட்ட வைக்கிறது
b) கைகளின்‌ நேர்த்தியான ———— பூக்களை மாலையாக்குகிறது
c) சூடான பொருளை கையால்‌ ———— இருக்க வேண்டும்‌
d) ———— சுருங்கி” என்பது ஒருவகைத்‌ தாவரம்‌

5) நாங்கள்‌ என்றும்‌ தூய்மையைக் ———— சரியான சொல்லைத்‌ தேர்வு செய்க.

a) கடைபிடிப்போம்‌
b) கடைப்பிடிப்போம்‌
c) கடையைபிடிப்போம்‌
d) கடையைப்பிடிப்போம்‌

6) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க. (அவர்கள்‌)

a ) எழாம்‌ வகுப்பு ———— மாணவர்கள்‌
b) ———— ஏழாம்‌ வகுப்பு மாணவர்கள்‌
c) ———— மாணவர்கள்‌ அவர்கள்‌ உள்ளனர்‌
d) நான்‌ ———— மாணவர்கள்‌

7) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க : (கண்ணெழுத்து)

a) சங்க காலத்தில்‌ ஓவியங்களை ———— என்று அழைத்தனர்‌.
b) நேர்கோடு, வளைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை ———— என்று அழைத்தனர்‌.
c) வண்ணங்கள்‌ குழப்பும்‌ பலகையை ———— என்று அழைத்தனர்‌.
d) கரித்துண்டுகளால்‌ வரையப்படும்‌ ஓவியங்களை ———— என்று அழைத்தனர்‌.

8) அடைப்புக்குள்‌ உள்ள ஒலி மரபுச்‌ சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க : (பேசும்‌)

a) குயில்‌ ————
b) மயில்‌ ————
c) கிளி ————
d) கூகை ————

9) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்க்க : (மணிமேகலை)

a) எட்டுத்தொகை நூல்களில்‌ ஒன்று ————
b) பத்துப்பாட்டு நூல்களில்‌ ஒன்று ————
c) ஐம்‌பெருங்காப்பியங்களில்‌ ஒன்று ————
d) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்‌ ஒன்று ————

10) அடைப்புக்குள்‌ உள்ள சொல்லை தொடருக்கு ஏற்றவாறு மாற்றுக.
கபிலர்‌ திறமையானவர் என்று ———— (குமரண்‌) தெரியும்‌.

a) குமரனால்‌
b) குமரனை
c) குமரனது
d) குமரனுக்கு

TNPSC Master