சொல்லும் பொருளும் அறிதல் (PYQ)

1) சொல்லும்‌ பொருளும்‌ பொருத்துக. (சொல்‌ – பொருள்‌)
A) கனகச்சுனை – 1) முழங்கும்‌
B) மதவேழங்கள்‌ – 2) முதிர்ந்த மூங்கில்‌
C) முரலும்‌ – 3) மதயானைகள்‌
D) பழவெய்‌ – 4) பொன்‌ வண்ண நீர்நிலை

a) 4, 3, 1, 2
b) 3, 4, 2, 1
c) 2, 1, 4, 3
d) 1, 2, 3, 4

2) திசைச்‌ சொற்களை பொருத்துக.
A) ரூபாய்‌ – 1) டச்சு
B) துட்டு – 2) இந்துஸ்தானி
C) நபர்‌ – 3) பார்ஸி
D) குல்லா – 4) அரபி

a) 1, 4, 2, 3
b) 4, 3, 1, 2
c) 2, 1, 4, 3
d) 3, 2, 1, 4

3) பொருத்தி விடை காண்க
A) யாணர்‌ – 1) ஓசை
B) வாரி – 2) தட்டுப்பாடின்றி
C) ஓதை – 3) புதுவருவாய்‌
D) முட்டாது – 4) வருவாய்‌

a) 3, 4, 1, 2
b) 4, 1, 2, 3
c) 3, 2, 4, 1
d) 1, 4, 3, 2

4) சரியாக பொருந்தும்‌ இணையைக்‌ கண்டறிக

a) நந்தவனம்‌ – இசை
b) பார்‌ – பூஞ்சோலை
c) பணி – உலகம்‌
d) இழைத்து – செய்து

5) சொல்‌ – பொருள்‌ – பொருத்துக
A) எத்தனிக்கும்‌ – 1) சமம்‌
B) வெற்பு – 2) வயல்‌
C) கழனி – 3) மலை
D) நிகர்‌ – 4) முயலும்‌

a) 4, 3, 2, 1
b) 1, 2, 4, 3
c) 3, 1, 2, 4
d) 4, 1, 3, 2

6) சொல்‌ – பொருள்‌ பொருத்துக
A) பயிலுதல்‌ – 1) மேகம்‌
B) நாணம்‌ – 2) படித்தல்‌
C) முகில்‌ – 3) எமன்‌
D) காலன்‌ – 4) வெட்கம்‌

a) 2, 4, 1, 3
b) 3, 2, 1, 4
c) 1, 2, 3, 4
d) 2, 3, 4, 1

7) சொல்‌ – பொருள்‌ – பொருத்துக:
A) கொண்டல்‌ – 1) மேற்கு
B) கோடை – 2) தெற்கு
C) வாடை – 3) கிழக்கு
D) தென்றல்‌ – 4) வடக்கு

a) 1, 2, 3, 4
b) 3, 1, 4, 2
c) 4, 3, 2, 1
d) 3, 4, 1, 2

8) சொல்‌ – பொருள்‌ – பொருத்துக :
A) கான்‌ – 1) கரடி
B) உழுவை – 2) சிங்கம்‌
C) மடங்கல்‌ – 3) புலி
D) எண்கு – 4) காடு

a) 4, 3, 2, 1
b) 4, 2, 3, 1
c) 3, 2, 1, 4
d) 1, 3, 2, 4

9) சொல்‌ – பொருள்‌ – பொருத்துக.
A) பண்‌ – 1) பதித்து
B) இழைத்து – 2) இசை
C) பார்‌ – 3) பூஞ்சோலை
D) நந்தவனம்‌ – 4) உலகம்‌

a) 3, 4, 2, 1
b) 1, 2, 3, 4
c) 3, 2, 1, 4
d) 2, 1, 4, 3

10) பொருந்தா இணையைக்‌ கண்டறிக : சொல்லோடு பொருளைப்‌ பொருத்துக.

a) கா – சோலை
b) கோ – அரசன்‌
c) சோ – மதில்‌
d) நா – கொடு