1) The head quarter of the Central Government is at ————

a) New Delhi
b) Kolkata
c) Chennai
d) Mumbai

1) இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு நடுவண் அரசு தலைமையகம் ————யில் அமைந்துள்ளது

a) புதுதில்லி
b) கொல்கத்தா
c) சென்னை
d) மும்பை

2) Articles 52 to ———— in part V of Indian Constitution deals with the Union Executive

a) 58
b) 63
c) 70
d) 78

2) இந்திய அரசியலமைப்பின் பகுதி Vஇல் 52 முதல் ———— வரையிலான சட்டப்பிரிவுகள் நடுவண் அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகின்றன

a) 58
b) 63
c) 70
d) 78

3) The ———— is the Supreme government in our country

a) State Government
b) Central Government
c) Both a and b
d) None of the above

3) இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு ———— ஆகும்

a) மாநில அரசு
b) ஒன்றிய அரசு
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

4) Which of the following are the organs of the Central Government?
A) Union Executive
B) Legislature
C) Judiciary

a) Only C
b) Only B
c) All A, B, C
d) Only A

4) இவற்றுள் நடுவண் அரசின் அங்கங்கள் யாவை?
A) நிர்வாகம்
B) சட்டமன்றம்
C) நீதித்துறை

a) C மட்டும்
b) B மட்டும்
c) A, B, C அனைத்தும்
d) A மட்டும்

5) The Legislature is known as the ————

a) Parliament
b) Lok Sabha
c) Rajya Sabha
d) None of the above

5) நடுவண் சட்டமன்றமானது ———— என்றழைக்கப்படுகிறது

a) நாடாளுமன்றம்
b) மக்களவை
c) மாநிலங்களவை
d) மேலே உள்ள எதுவும் இல்லை

6) The Union Judiciary consists of the ———— of India

a) High Court
b) People Court
c) Panchayat
d) Supreme Court

6) நடுவண் நீதித்துறை ————த்தைக் கொண்டுள்ளது

a) உயர்நீதிமன்றம்
b) மக்கள் மன்றம்
c) பஞ்சாயத்
d) உச்சநீதிமன்றம்

7) Who is the chief executive of the Indian union?

a) Prime minister
b) President
c) Vice-President
d) Chief Justice of India

7) நடுவண் அரசின் நிர்வாகத் தலைவர் யார்?

a) பிரதம அமைச்சர்
b) குடியரசுத் தலைவர்
c) துணைக் குடியரசுத் தலைவர்
d) இந்தியத் தலைமை நீதிபதி

8) Which of the following statements are TRUE about the President of India?
A) The President is designated as the First citizen of India
B) He is the supreme commander of the armed forces

a) Only A
b) Only B
c) Both A and B
d) None of the above

8) இவற்றுள் எந்த வாக்கியங்கள் குடியரசுத் தலைவரைப் பற்றிய சரியான வாக்கியங்கள் ஆகும்?
A) இந்தியக் குடியரசுத் தலைவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார்
B) அவர் முப்படைகளின் தலைமை தளபதியாகச் செயல்படுகிறார்

a) A மட்டும்
b) B மட்டும்
c) A மற்றும் B இரண்டும்
d) மேலே உள்ள எதுவும் இல்லை

9) Statement 1 : The President cannot be a Member of Parliament or of a State Legislature
Statement 2 : If he is a member of any legislature, his seat will be deemed to have been vacated on the date he / she assumes the office of President

a) Statement 1 is true, Statement 2 is true. Statement 2 explains Statement 1
b) Statement 1 is true, Statement 2 is true. Statement 2 doesn’t explain Statement 1
c) Statement 1 is true, Statement 2 is false
d) Statement 1 is false, Statement 2 is true

9) வாக்கியம் 1 : குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது
வாக்கியம் 2 : ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாகக் கருதப்படும்

a) வாக்கியம் 1 உண்மை வாக்கியம் 2 உண்மை. வாக்கியம் 2 வாக்கியம் 1 ஐ விவரிக்கிறது
b) வாக்கியம் 1 உண்மை வாக்கியம் 2 உண்மை. வாக்கியம் 2 வாக்கியம் 1 ஐ விவரிக்கவில்லை
c) வாக்கியம் 1 உண்மை வாக்கியம் 2 பொய்
d) வாக்கியம் 1 பொய் வாக்கியம் 2 உண்மை

10) The President of India resides at ———— in New Delhi

a) Rajya Sabha
b) Lok Sabha
c) Rashtrapati Bhavan
d) None of the above

10) புதுதில்லியில் உள்ள ———— குடியரசுத் தலைவரின் இல்லம் ஆகும்

a) மாநிலங்களவை
b) மக்களவை
c) ராஷ்டிரபதி பவன்
d) மேலே உள்ள எதுவும் இல்லை