1) கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
a) நச்சர்
b) திருமலையர்
c) அடியார்க்கு நல்லார்
d) தாமத்தர்
2) “நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்” – இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?
a) இல்லறவியல்
b) துறவறவியல்
c) ஊழியல்
d) பாயிரவியல்
3) “வள்ளைக்கு உறங்கும் வளநாட”
வள்ளை – என்பதன் பொருள் யாது?
a) நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
b) நடவு நடும்போது பெண்கள் பாடும் பாட்டு
c) கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
d) இவை எதுவம் இல்லை
4) “திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” எனக் கூறியவர்
a) கி.வா.ஜ
b) கி.ஆ.பெ.வி
c) திரு.வி.க.
d) உ.வே.சா
5) சரியான ஈற்றடியைத் தேர்க :
“ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்கு
————”
a) பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
b) பொன்றுந் துணையும் புகழ்
c) தகுதியான் வென்று விடல்
d) அறனல்ல செய்யாமை நன்று
6) உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?
a) 1786
b) 1858
c) 1808
d) 1886
7) பட்டியல் Iல் உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
A) பேதையர் நட்பு – 1) உடுக்கை இழந்தகை
B) பண்புடையார் தொடர்பு – 2) வளர்பிறை
C) அறிவுடையார் நட்பு – 3) நவில் தோறும்
D) இடுக்கண் களையும் நட்பு – 4) தேய்பிறை
a) A-4, B-3, C-2, D-1
b) A-3, B-4, C-2, D-1
c) A-4, B-3, C-1, D-2
d) A-1, B-2, C-3, D-4
8) “வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” – பாடியவர் யார்?
a) பாரதியார்
b) சுரதா
c) தாரா பாரதி
d) பாரதிதாசன்
9) பொருத்துக:
A) அன்பிலார் – 1) ஆர்வமுடைமை
B) அன்புடையார் – 2) உயிர்நிலை
C) அன்பு ஈனும் – 3) என்பும் உரியர்
D) அன்பின் வழியது – 4) எல்லாம் தமக்குரியர்
a) A-2, B-3, C-4, D-1
b) A-4, B-3, C-1, D-2
c) A-1, B-4, C-2, D-3
d) A-3, B-2, C-1, D-4
10) கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது?
a) உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்
b) சூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது
c) கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றை யவை
d) தாம்இன்புறுவது உலகு இன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்