1) What is the name of the Buddhist scripture?
a) Angas
b) Tripitakas
c) Thirukkural
d) Naladiyar
1) பெளத்த நூல்களின் பெயர் என்ன?
a) அங்கங்கள்
b) திரிபிடகங்கள்
c) திருக்குறள்
d) நாலடியார்
2) Who was the first Tirthankara of Jainism?
a) Rishabha
b) Parsava
c) Vardhamana
d) Buddha
2) சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
a) ரிஷபா
b) பார்சவ
c) வர்தமான
d) புத்தர்
3) How many Tirthankaras were there in Jainism?
a) 23
b) 24
c) 25
d) 26
3) சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
a) 23
b) 24
c) 25
d) 26
4) Where was the third Buddhist Council convened?
a) Rajagriha
b) Vaishali
c) Pataliputra
d) Kashmir
4) மூன்றாம் பெளத்தசபை எங்குக் கூட்டப்பட்டது?
a) ராஜகிரகம்
b) வைசாலி
c) பாடலிபுத்திரம்
d) காஷ்மீர்
5) Where did Buddha deliver his first sermon?
a) Lumbini
b) Sarnath
c) Taxila
d) Bodh Gaya
5) புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
a) லும்பினி
b) சாரநாத்
c) தட்சசீலம்
d) புத்தகயா
6) Statement: The Jatakas are popular tales.
Reason : Frescoes on the ceilings and walls of Ajanta caves depict the Jataka Tales.
a) Statement and its Reason are correct.
b) Statement is wrong.
c) Statement is true, but the Reason for that is wrong.
d) Both statements and Reasons are wrong.
6) கூற்று : ஜாதகங்கள் புகழ் பெற்ற கதைகளாகும்
காரணம் : அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளைச் சித்தரிக்கின்றன.
a) கூற்றும், அதற்கான காரணமும் சரி
b) கூற்று தவறு
c) கூற்று சரி, ஆனால் அதற்கான காரணம் தவறு
d) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு
7) Find out the correct answer:
Buddha Viharas are used for
1) Education
2) Stay of Buddhist monks
3) Pilgrim’s stay
4) Prayer hall
a) 2 is correct
b) 1 and 3 are correct
c) 1, 2, 4 are correct
d) 1 and 4 are correct
7) சரியான விடையைக் கண்டறியவும் புத்த விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
1) கல்விக் கூடமாக
2) பெளத்தத் துறவிகளின் தங்குமிடம்
3) புனிதப் பயணிகள் தங்குவதற்காக
4) வழிபாட்டுக் கூடம்
a) 2 சரி
b) 1 மற்றும் 3 சரி
c) 1, 2, 4 ஆகியவை சரி
d) 1 மற்றும் 4 சரி
8) Consider the following statements regarding the causes of the origin of Jainism and Buddhism.
1) Sacrificial ceremonies were expensive.
2) Superstitious beliefs and practices confused the common man
Which of the above statement(s) is/are correct?
a) Only 1
b) Only 2
c) Both 1 & 2
d) Neither 1 nor 2
8) சமணமும் பெளத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்டக் கூற்றுகளைக் காரணமாகக் கருதலாமா?
1) வேள்விச்சடங்குகள் பருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2) மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களைக் குழப்பமுறச் செய்தன
மேற்சொல்லப்பட்ட கூற்றில் / கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை
a) 1 மட்டும்
b) 2 மட்டும்
c) 1 மற்றும் 2
d) 1 மற்றும் 2ம் இல்லை
9) Which of the following about Jainism is correct?
a) Jainism denies God as the creator of the universe.
b) Jainism accepts God as the creator of the universe.
c) The basic philosophy of Jainism is idol worship.
d) Jains accept the belief in Last Judgement.
9) சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?
a) உலகைக் கடவுள் தோற்றுவித்தார் என்பதைச் சமணம் மறுக்கிறது.
b) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக் கொள்கிறது.
c) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலைவழிபாடாகும்.
d) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக் கொள்கிறது.
10) Circle the odd one
a) Parsava
b) Mahavira
c) Buddha
d) Rishaba
10) பொருந்தாததை வட்டமிடு
a) பார்சவா
b) மகாவீர்
c) புத்தர்
d) ரிஷபர்