1) Brine is a concentrated solution of ————

a) Sodium sulphate
b) sodium chloride
c) calcium chloride
d) sodium bromide

1) பிரைன்‌ என்பது ———— இன்‌ அடர் கரைசல்‌ ஆகும்‌.

a) சோடியம்‌ சல்பேட்‌
b) சோடியம்‌ குளோரைடு
c) கால்சியம்‌ குளோரைடு
d) சோடியம்‌ புரோமைடு

2) Which of the following factor induces electrolysis?

a) Heat
b) light
c) electricity
d) catalysis

2) கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?

a) வெப்பம்‌
b) ஒளி
c) மின்சாரம்‌
d) வினைவேக மாற்றி

3) Electrolysis of Brine solution gives ———— gases.

a) Oxygen and hydrogen
b) hydrogen and Nitrogen
c) Sulphur and hydrogen
d) Chlorine and hydrogen

3) பிரைன்‌ கரைசலின்‌ மின்னாற்பகுத்தல்‌ ———— வாயுக்களைத்‌ தருகிறது.

a) ஆக்சிஜன்‌ மற்றும்‌ ஹைட்ரஜன்‌
b) ஹைட்ரஜன்‌ மற்றும்‌ நைட்ரஜன்‌
c) சல்பர்‌ மற்றும்‌ ஹைட்ரஜன்‌
d) குளோரின்‌ மற்றும்‌ ஹைட்ரஜன்‌

4) The same proportion of carbon and oxygen in the carbon dioxide obtained from different sources proves the law of ————

a) reciprocal proportion
b) definite proportion
c) multiple proportion
d) conservation of mass

4) கார்பன்‌ டை ஆக்சைடு எம்முறையில்‌ தயாரிக்கப்பட்டாலும்‌ அதில்‌ கார்பன்‌ மற்றும்‌ ஆக்சிஜனின்‌ நிறைவிகிதம்‌ மாறாதிருப்பது ———— விதியை நிரூபிக்கிறது.

a) தலைகீழ்‌ விகித விதி
b) மாறா விகித விதி
c) பெருக்கல்‌ விதி
d) பொருண்மை அழியா விதி

5) Cathode rays are made up of

a) neutral particles
b) positively charged particles
c) negatively charged particles
d) None of the above

5) கேதோடு கதிர்கள்‌ ஆல்‌ ———— உருவாக்கப்பட்டவை.

a) மின்சுமையற்ற துகள்கள்‌
b) நேர்மின்சுமை பெற்ற துகள்கள்‌
c) எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்‌
d) மேற்கண்ட எதுவுமில்லை

6) A negatively charged ion is called ———— while positively charged ion is called ————

a) Cathode & Anode
b) Anode & Cathode
c) Positive & Negative
d) Negative & Positive

6) எதிர்மின்சுமை கொண்ட அயனி ———— எனப்படும்‌, நேர்‌ மின்சுமை கொண்ட அயனி ———— எனப்படும்‌.

a) கேதோடு & ஆனோடு
b) ஆனோடு & கேதோடு
c) நேர்‌ & எதிர்‌
d) எதிர்‌ & நேர்‌

7) ———— is a negatively charged particle.

a) Neutron
b) Proton
c) Electron
d) None of these

7) ———— ஒரு எதிர்மின்சுமை கொண்ட துகள்‌

a) நியூட்ரான்‌
b) புரோட்டான்‌
c) எலக்ட்ரான்‌
d) எதுவும்‌ இல்லை

8) Proton is deflected towards the ———— charged plate.

a) Positively
b) Negatively
c) a (or) b
d) None

8) புரோட்டான்கள்‌ ———— மின்சுமை கொண்ட தகட்டை நோக்கி விலக்கமடைகின்றன.

a) நேர்‌
b) எதிர்‌
c) a அல்லது b
d) எதுவும்‌ இல்லை

9) Match the following
A) Law of conservation of mass – 1) Sir William Crookes
B) Law of constant – 2) James Chadwick
C) Cathode rays – 3) Joseph Proust
D) Anode rays – 4) Lavoisier
E) Neutrons – 5) Goldstein

a) 2, 4, 1, 5, 3
b) 4, 3, 5, 2, 1
c) 4, 3, 1, 5, 2
d) 2, 3, 4, 1, 5

9) பொருத்துக
A) பொருண்மை அழியாவிதி – 1) சர்‌ வில்லியம்‌ குரூக்ஸ்‌
B) மாறா விகித விதி – 2) ஜேம்ஸ்‌ சாட்விக்‌
C) கேதோடு கதிர்கள்‌ – 3) ஜோசப்‌ ப்ரெளஸ்ட்‌
D) ஆனோடு கதிர்கள்‌ – 4) லாவாய்சியர்‌
E) நியூட்ரான்‌ – 5) கோல்ட்ஸ்டீன்‌

a) 2, 4, 1, 5, 3
b) 4, 3, 5, 2, 1
c) 4, 3, 1, 5, 2
d) 2, 3, 4, 1, 5

10) The gas collected at the cathode in electrolysis of water is

a) oxygen
b) hydrogen
c) nitrogen
d) carbon dioxide

10) நீரினை மின்னாற்பகுக்கும்‌ போது எதிர்மின்‌ வாயில்‌ சேகரிக்கப்படும்‌ வாயு?

a) ஆக்சிஜன்‌
b) ஹைட்ரஜன்‌
c) நைட்ரஜன்‌
d) கார்பன்‌-டை-ஆக்சைடு