1) Who translated the book, “Tirunelveli Charithiram” into English?
a) Rhenius Iyer
b) Lord Ellis
c) Caldwell
d) Ziegenbalg
1) திருநெல்வேலிச் சரித்திரம் என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
a) இரேனியுஸ் ஐயர்
b) எல்லிஸ் துரை
c) கால்டுவெல்
d) சீகன் பால்கு ஐயர்
2) Choose the right answer:
Which of the following statements is true about the trade activities of ancient Tamilakam?
I) Kaveri Pumpattinam was also known as Anuradhapuram
II) There were two kinds of markets such as Allangadi and Nallangadi
III) Yavanars had trade contacts with ancient Tamils
a) I only
b) II and III only
c) I and II only
d) I and III only
2) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
பண்டைய காலத் தமிழர்களின் வணிக (தொடர்பு நடவடிக்கை) பற்றி பின்வரும் கூற்றில் எது உண்மையானவை?
I) காவிரிப்பூம்பட்டினம், அனுராதாபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
II) அல் அங்காடி மற்றும் நாள் அங்காடி என்று இரண்டு வகை சந்தை இருந்து வந்தது.
III) பழங்கால தமிழர்களோடு யவனர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
a) I மட்டும்
b) II மற்றும் III மட்டும்
c) I மற்றும் II மட்டும்
d) I மற்றும் III மட்டும்
3) Methods of measuring lands such as Are, Nivarthanam and Pattigai were followed during whose period?
a) Cholar period
b) Cherar period
c) Pandiar period
d) Pallava period
3) நிலம் அளப்பதற்கு ஏர், நிவர்த்தனம், பட்டிகை என்ற முறைகள் யாருடைய காலத்தில் கையாளப்பட்டன?
a) சோழர் காலம்
b) சேரர் காலம்
c) பாண்டியர் காலம்
d) பல்லவர் காலம்
4) Which flower is the symbol of chastity for women in Tamil Society?
a) Jasmine
b) Rose
c) Mullai
d) Lily
4) தமிழ்ச் சமூகத்தில் மகளிர்க்குக் கற்பின் குறியீடாக அமையும் மலர் எது?
a) மல்லிகை
b) ரோஜா
c) முல்லை
d) அல்லி
5) Choose the Correct Statement
i) Hero stones of the Sangam Age can be found at Porpanai Kottai in Pudukkottai district
ii) Arikamedu is a Sangam Age Port
iii) The Indian Treasure Trove Act was passed in 1878
iv) Roman coins are concentrated in the Tirunelveli region of South India.
a) i, ii and iv are correct
b) i, ii and iii are correct
c) ii, iii are correct
d) ii and iv are correct
5) சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்
i) புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை என்ற இடத்தில் சங்ககால நடுகற்கள் காணப்படுகின்றன.
ii) அரிக்கமேடு என்ற இடம் சங்ககாலத் துறைமுகப்பட்டினம் ஆகும்.
iii) இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம் 1878 இல் வகுக்கப்பட்டுள்ளது
iv) ரோமானிய நாணயங்கள் தென்னிந்தியாவின் திருநெல்வேலி மண்டலத்தில் செறிந்து காணப்படுகின்றன.
a) i, ii மற்றும் iv சரி
b) i, ii மற்றும் iii சரி
c) ii, iii சரி
d) ii மற்றும் iv சரி
6) Which of the following pairs is not correct?
i) Ilanjetchenni – Chenguttuvan
ii) Mangulam – Tamil Brahmi Inscription
iii) Uruttirankannanar – Pattinappalai
iv) Velir Chieftains – Thithiyan
a) i Only
b) ii Only
c) iii Only
d) iv Only
6) கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i) இளஞ்சேட்சென்னி – செங்குட்டுவன்
ii) மாங்குளம் – தமிழ் பிராமி கல்வெட்டு
iii) உருத்திரங்கண்ணனார் – பட்டினப்பாலை
iv) வேளிர்குல சிற்றரசர் – திதியன்
a) i மட்டும்
b) ii மட்டும்
c) iii மட்டும்
d) iv மட்டும்
7) The earliest copper plate inscriptions of Cholas discovered in Tamil Nadu are
I) Thiruvalangadu Copper Plates
II) Velvikudi Copper Plates
III) Velur Palayam Plates
IV) Chinnamanur Copper Plates
a) I Only
b) II and III Only
c) I and III Only
d) II and IV Only
7) தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்களின் ஆரம்பகால செப்புத்தகடு கல்வெட்டுகள்
I) திருவாலங்காடு செப்புப் பட்டயம்
II) வேள்விக்குடி செப்புப் பட்டயம்
III) வேலூர் பாளையம் பட்டயம்
IV) சின்னமனூர் செப்புப் பட்டயம்
a) I மட்டும்
b) II மற்றும் III மட்டும்
c) I மற்றும் III மட்டும்
d) III மற்றும் IV மட்டும்
8) Match the following from List I with List ॥ and choose the correct option.
A) Kurinji – 1) Indra
B) Mullai – 2) Murugan
C) Marudam – 3) Thirumal
D) Neydal – 4) Varuna
a) 2, 3, 1, 4
b) 3, 2, 1, 4
c) 2, 1, 3, 4
d) 3, 1, 2, 4
8) வரிசை Iல் உள்ளதை IIல் வரிசையுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A) குறிஞ்சி – 1) இந்திரன்
B) முல்லை – 2) முருகன்
C) மருதம் – 3) திருமால்
D) நெய்தல் – 4) வருணன்
a) 2, 3, 1, 4
b) 3, 2, 1, 4
c) 2, 1, 3, 4
d) 3, 1, 2, 4
9) Among the Kadaiyelu Vallal who offered Neelamani and Nagam thantha Kalingam to Sivan?
a) Kaari
b) Oori
c) Aai Andiran
d) Nalli
9) கடையெழு வள்ளல்களில் நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவர் யார்?
a) காரி
b) ஓரி
c) ஆய் அண்டிரன்
d) நல்லி
10) Match the Column – I (Archaeological Sites) with their districts in Column – II
A) Kodumanal – 1) Thoothukudi
B) Porunthal – 2) Villupuram
C) Thiruvakkarai – 3) Erode
D) Adichanallur – 4) Dindigul
a) 1, 3, 2, 4
b) 3, 4, 2, 1
c) 3, 4, 1, 2
d) 1, 2, 4, 3
10) வரிசை I-ல் காணும் தொல்லியல் ஆய்வு இடங்களை வரிசை II-ல் உள்ள அவற்றின் மாவட்டங்களுடன் பொருத்துக.
A) கொடுமணல் – 1) தூத்துக்குடி
B) பொருந்தல் – 2) விழுப்புரம்
C) திருவக்கரை – 3) ஈரோடு
D) ஆதிச்சநல்லூர் – 4) திண்டுக்கல்
a) 1, 3, 2, 4
b) 3, 4, 2, 1
c) 3, 4, 1, 2
d) 1, 2, 4, 3