1) d – block elements are called as
a) Inner transition metals
b) Transition metals
c) Alkali metals
d) Alkaline earth metals
1) d – தொகுதி தனிமங்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) உள் இடைநிலைத் தனிமங்கள்
b) இடைநிலைத் தனிமங்கள்
c) கார உலோகங்கள்
d) கார மண் உலோகங்கள்
2) Who proposed the law of octaves while arranging the elements in the periodic table?
a) Lavoisier
b) New Land
c) Lothar Meyer
d) Mendeleev
2) தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் வரிசைப்படுத்தும் போது எண்ம விதியை முன்மொழிந்தவர் யார்?
a) இலாவோசியர்
b) நியு லாண்ட்
c) லோதா மேயர்
d) மெண்டலீவ்
3) Which of the following is most abundant in earth’s crust?
a) C.Carbon
b) Si.Silicon
c) Ge.Germanium
d) Sn.tin
3) பின்வருவனவற்றுள் எது புவியில் அதிகமாக கிடைக்கிறது?
a) C.கார்பன்
b) Si.சிலிகான்
c) Ge.ஜெர்மானியம்
d) Sn.டின்
4) Select the correct statement with respect to d-block elements
a) They are all metals
b) They show variable valency
c) They form coloured ions and complex salts
d) All above statement are correct
4) தொகுதி தனிமங்களைப் பொறுத்து சரியான கூற்றுரையைத் தேர்ந்தெடு
a) அவை அனைத்தும் உலோகங்கள்
b) அவை வேறுபட்ட இணைதிறன்களைக் கொண்டுள்ளன
c) அவை நிறமுள்ள அயனிகளையும், அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன.
d) மேற்கூறிய அனைத்தும் சரியானவை
5) Which element is toxic among Boron family?
a) B – Boron
b) Ga – Gallium
c) Tl – Thallium
d) In – Indium
5) போரான் குடும்பத்தில் எது மிகவும் நச்சுத்தன்மை உடையது?
a) B – போரான்
b) Ga – காலியம்
c) Tl – தாலியம்
d) In – இண்டியம்
6) The distance between the molecules is
a) 10 A°
b) 1 A°
c) 10-8 m
d) 10-15 m
6) மூலக்கூறுகளுக்கிடையேயான தொலைவு
a) 10 A°
b) 1 A°
c) 10-8 m
d) 10-15 m
7) The element which is an essential constituent of all organic compounds belongs to ———— group
a) 15th group
b) 14th group
c) 13th group
d) 16th group
7) அனைத்துக் கரிமச்சேர்மங்களுக்கும் அடிப்படையான தனிமம் ———— தொகுதியில் உள்ளது.
a) 15 – ஆவது தொகுதியில்
b) 14 – ஆவது தொகுதியில்
c) 13 – ஆவது தொகுதியில்
d) 16 – ஆவது தொகுதியில்
8) What is General electronic configuration of the transition elements?
a) (n-1)d0-10ns1-2
b) (n-1)d1-10ns1-2
c) (n-1)d1-5ns2
d) (n-1)d0ns1
8) இடைநிலைத் தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பை தேர்ந்தெடு
a) (n-1)d0-10ns1-2
b) (n-1)d1-10ns1-2
c) (n-1)d1-5ns2
d) (n-1)d0ns1
9) One among the following is monoatomic
a) Oxygen
b) Helium
c) Fluorine
d) Nitrogen
9) கீழ்க்கண்டவற்றுள் ஒன்று ஓரணுத் தனிமம்
a) ஆக்சிஜன்
b) ஹீலியம்
c) புளூரின்
d) நைட்ரஜன்
10) Find out the incorrect statement(s):
I) All lanthanides are non-radioactive
II) Some actinides form MO22+, MO22+ oxocations
III) The compounds of lanthanides are more basic than that of actinide compounds
IV) 5f elements show variable oxidation states like +2, +3, +4, +5, +6 and +7
a) I and III
b) II and IV
c) III only
d) IV only
10) தவறான சொற்றொடர்(களை) காண்க:
I) எல்லா லேந்தனைடுகளும் கதிரியக்கத் தன்மையற்றவை
II) சில ஆக்டினைடுகள் MO22+, MO22+ வகை ஆக்சோ நேர் அயனிகளை உருவாகின்றன
III) ஆக்டினைடு சேர்மங்களைக் காட்டிலும் லேந்தனைடு சேர்மங்கள் அதிக காரத் தன்மையுடையன
IV) 5f வரிசைத் தனிமங்கள் மாறுபட்ட ஆக்ஸிஜனேற்ற நிலைகளான +2, +3, +4, +5, +6 மற்றும் +7 உடையன.
a) I மற்றும் III
b) II மற்றும் IV
c) III மட்டும்
d) IV மட்டும்