1) Which of the following is correctly matched?
I) Article-153 – Executive power of the state
I) Article-155 – Qualifications for Appointment as Governor
III) Article-161 – Oath of affirmation by the Governor
IV) Article-167 – Duties of Chief Minister Regarding The furnishing of information with Governor

a) I
b) II
c) III
d) IV

1) கீழ்க்கண்டவற்றுள்‌ எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
I) விதி-153 – மாநில நிர்வாக அதிகாரம்‌
II) விதி-155 – ஆளுநர்‌ நியமனத்திற்கான தகுதிகள்‌
III) விதி-161 – ஆளுநரால்‌ எடுக்கப்படும்‌ உறுதி மொழியும்‌ பதவிப்‌ பிரமாணமும்‌
IV) விதி-167 – ஆளுநருக்குத்‌ தகவல்‌ அளிப்பது தொடர்பானவற்றில்‌ முதலமைச்சருக்குள்ள கடமைகள்‌

a) I
b) II
c) III
d) IV

2) The members of the State Public Service Commission are appointed by the

a) Chief Minister
b) Chief Justice
c) Governor
d) Vice-president

2) மாநில அரசுப் பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ உறுப்பினர்களை பணியமர்த்துவது

a) முதலமைச்சர்‌
b) தலைமை நீதிபதி
c) ஆளுநர்‌
d) துணைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌

3) Which one of the following Article deals with the office of the Advocate General for the state

a) Article – 155
b) Article – 165
c) Article – 175
d) Article -185

3) கீழ்கண்டவற்றுள்‌ மாநில தலைமை வழக்கறிஞர்‌ அலுவலகம்‌ தொடர்புடைய அரசியலமைப்பு சட்ட சரத்து எது?

a) விதி – 155
b) விதி – 165
c) விதி – 175
d) விதி – 185

4) Which one of the following is not correctly matched?

a) Article 153 – Office of the Governor
b) Article 156 – Term of the Governor
c) Article 154 – Executive authority of Governor
d) Article 155 – Removal of Governor

4) பின்வருபவற்றுள்‌ தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?

a) விதி 153 – ஆளுநர்‌ பதவி
b) விதி 156 – ஆளுநர்‌ பதவிக்‌ காலம்‌
c) விதி 154 – ஆளுநர்‌ நிர்வாக அதிகாரம்‌
d) விதி 155 – ஆளுநர்‌ பதவி நீக்கம்‌

5) Who was the First Woman Governor of an Indian State?

a) Sharda Mukherjee
b) Kiran Bedi
c) Fathima Beevi
d) Sarojini Naidu

5) இந்திய மாநிலத்தின்‌ முதல்‌ பெண்‌ கவர்னர்‌ யார்‌?

a) ஷார்டா முகர்ஜி
b) கிரண்‌ பேடி
c) பாத்திமா பீவி
d) சரோஜினி நாயுடு

6) Which of the following statements is / are correct?
1) The Term of office of the Governor is five years
2) He can remain in office till his successor enters upon the office of the Governor.

a) Both 1, 2 are correct
b) Only 1 is correct
c) Only 2 is correct
d) Both 1, 2 are incorrect

6) பின்வரும்‌ கூற்றுகளில்‌ எவை சரியானது?
1) ஆளுநரின்‌ பதவிக்காலம்‌ 5 ஆண்டுகள்‌
2) ஆளுநரின்‌ பதவிக்‌ காலம்‌ முடிவடைந்த போதிலும்‌ கூட பின்னர்‌ வருபவர்‌ பதவியேற்கும்‌ வரை பதவியில்‌ தொடர்கிறார்‌.

a) 1, 2 ஆகிய இரண்டுமே சரி
b) 1 மட்டும்‌ சரி
c) 2 மட்டும்‌ சரி
d) 1, 2 ஆகிய இரண்டுமே தவறு

7) Assertion (A) : The Governor shall hold office during the pleasure of the President.
Reason (R) : The Governor of a state shall be appointed by the president of India.

a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true but (R) is not a correct explanation of (A)
c) (A) is true but (R) is false
d) (A) is false but (R) is false

7) கூற்று (A) : குடியரசுத்‌ தலைவர்‌ விரும்பும்‌ வரை ஆளுநர்‌ பதவியில்‌ நீடிப்பார்‌
காரணம்‌ (R) : மாநில ஆளுநரைக்‌ குடியரசுத்‌ தலைவர்‌ நியமிக்கிறார்‌

a) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி (R) என்பது (A) வின்‌ சரியான விளக்கமாகும்‌.
b) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி (R) என்பது (A) வின்‌ சரியான விளக்கம்‌ அல்ல
c) (A) மட்டும்‌ சரி (R) தவறாகும்‌
d) (A) தவறு (R) சரியாகும்‌

8) Match the following and answer by using the codes:
A) Article 370 – 1) Legislative assembly
B) Article 153 – 2) Chief Minister
C) Article 163 – 3) Jammu and Kashmir
D) Article 170 – 4) Governor

a) 1, 4, 2, 3
b) 3, 1, 4, 2
c) 2, 4, 1, 3
d) 3, 4, 2, 1

8) கீழ்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
A) விதி 370 – 1) சட்டப்பேரவை
B) விதி 153 – 2) முதலமைச்சர்‌
C) விதி 163 – 3) ஜம்மு மற்றும்‌ காஷ்மீர்‌
D) விதி 170 – 4) ஆளுநர்‌

a) 1, 4, 2, 3
b) 3, 1, 4, 2
c) 2, 4, 1, 3
d) 3, 4, 2, 1

9) A member of a State Public Service Commission can be appointed and removed respectively by

a) Governor, Governor
b) Governor, President
c) President, Governor
d) President, President

9) ஒரு மாநில அரசு சேவை ஆணையத்தின்‌ உறுப்பினர்‌ யாரால்‌ முறையே நியமிக்க மற்றும்‌ நீக்க முடியும்‌?

a) ஆளுநர்‌, ஆளுநர்‌
b) ஆளுநர்‌, குடியரசு தலைவர்‌
c) குடியரசு தலைவர்‌, ஆளுநர்‌
d) குடியரசு தலைவர்‌, குடியரசு தலைவர்‌

10) Assertion (A) : Each State is headed by a Governor
Reason (R) : The Governor is elected by the Electoral college consisting of the elected members of the State Legislative Assembly

a) (A) and (R) are true (R) is the correct explanation of (A)
b) (A) and (R) are true but (R) is not correct explanation of (A)
c) (A) is true but (R) is false
d) (A) is false but (R) is true

10) கூற்று (A) : ஒவ்வொரு மாநிலமும்‌ ஆளுநரின்‌ தலைமையின்‌ கீழ்‌ உள்ளது.
காரணம்‌ (R) : தேர்வுக்குழு எனப்படும்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே ஆளுநரை தேர்ந்தெடுக்கிறார்கள்‌.

a) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி (A)-ன் சரியான விளக்கம்‌ (R)
b) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி ஆனால்‌ (A)-ன்‌ சரியான விளக்கம்‌ (R) அல்ல
c) (A) சரி ஆனால்‌ (R) தவறு
d) (A) தவறு ஆனால் (R) சரி